Showing posts with label முகநூல். Show all posts
Showing posts with label முகநூல். Show all posts

Monday, 25 August 2014

உன்னைப் பார்த்தாலே அடிமை

உன்னைப் பற்றி உயர்வாய் சிலர் சொன்னார்கள்
உன்னைப் பார்த்தாலே அடிமையாய் விடுவாய் என்று சிலர் சொன்னார்கள்

பலர் பலவிதமாகச் சொல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் அதிகமானது
உன்னிடம் வந்தவுடன் பலர் பலவிதமாகச் சொல்வதிலும் உண்மை இருப்பதாக அறிகின்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்
உன்னைப் பார்த்த பின் பிரிய மனமில்லை

Tuesday, 25 February 2014

முகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது

லைக் என்றால் விரும்புதல்
லைக் என்றால் போன்று (ஒரே மாதிரி )

நான் இதை லைக் செய்கிறேன்
நான் இதை லைக் செய்தமையால்
எனது கருத்தும் இதில் கண்டுள்ள கருத்தும் உடன் படுகிறது

நான் லைக் செய்து விட்டேன் இதை பார்த்தவுடன் ஆனால்
நான் முழுமையாக விரும்பவில்லை அதனால்
நான் எனது கருத்துரையை இங்கே தருகிறேன்
நான் எந்த அளவுக்கு விரும்புகின்றேன் மற்றும்
நான் எந்த அளவுக்கு மாறுபடுகின்றேன் என்பதனை
நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

Friday, 7 February 2014

முகநூல் அறிந்து முகநூலை கொடுத்தவன் பணமாக்க அறிந்தவன்

கவலையை போக்க
கண்டதையும் கற்க
படங்களை பார்த்து ரசிக்க
நண்பர்களை சேர்க்க
சேர்த்த நண்பர்களை கண்டு கொள்ளாமல் இருக்க
சேர்த்த நண்பர்களை கழட்டி விட
காலத்தே உறங்காமல் உடலை கெடுக்க்
கடினமாக கருத்துரை வழங்க
கட்சி பிரச்சாரம் செய்ய
கட்சியை திட்டி எழுத
எதையாவது எழுத
எழுதியதை தானே படித்து மகிழ
எழுதியதற்கு யாராவது லைக் போட மாட்டார்களா என்று ஏங்க!
எதையும் தாங்கும் இடமாக இது இருக்க
இதை பலர் வெற்றியடைய முயல்
முயன்றது முயலாமல் போக
மற்றவர் கொட்டும் நல்லதையும் கெட்டதையும் பெற்று பணமாக்க அறிந்தவன் முகநூல் அறிந்து முகநூலை கொடுத்தவன்

Friday, 23 August 2013

தேடும் இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்

தேடல் தேவை
தேடலுக்கு ஓர் இடம் இது
தேடலுக்கு மனது தேவை
தேடியதும் கிடைக்கும்
தேடாததும் கிடைக்கும்
தேடிய இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்
தேடியதில் நல்லவை நம்மிடம் கிடைக்கும்
தேடியதில் தகாதவை தானே மறையும்
தேடியதில் ஒரு பொறி கிடைக்கும்
தேடிய பொறியை பெருமைப் படுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தேடிப் பயன்படுத்தியதை மற்றவர் பயன்பட வைக்க வேண்டும்
தேடிக் கிடைத்தது சிறிதுதான் அதுவே பெருமைப்பட பெரிதாக்கிவிட வேண்டும்

Saturday, 13 April 2013

பேஸ்புக் (முகநூல் ) ஒரு ஈர்ப்பு சக்தி பெற்றது

அன்பு நண்பா,
தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ஒன்று கூடுமிடம் .உயர்வான இடம் . உயர்ந்தோர் மற்றும் சிறியோர் முதல் மூத்தோர் வரை வந்து ஆண் பெண் அனைவரும் சங்கமமாகி மனதில் உள்ளதை கொட்டி தன்னை உருவாக்குமிடம்.அதுவே சிலருக்கு உருப்படாமல் போக வழி வகுக்குமிடம் . நாடுவது கிடைக்கும் .துன்பமும் துயரமும் ,மகிழ்வும் அறிவும் இனாமாக இடைக்குமிடம் .கிடைப்பது அனைத்தும் அவரவரது நோக்கத்தைப் பொருத்து அமையும்

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(- ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் :1)

பேஸ்புக் நமக்காக நல்ல மனதோடு ஓர் இடம் தந்துள்ளது (ஃபேஸ்புக் பணம் ஈட்டுவது அதன் தொழில்) அந்த இடத்தை நேரம் கிடக்கும்போதேல்லாம் உள்ளத்தின் உணர்வுகள் உந்தப்பட்டு மனதில் உள்ளதைக் கொட்டி இதய பாரத்தைக் குறைக்க முற்படுகின்றோம்.நேரில் பேசும்போது வாக்குவாதம் வந்துவிடும் அதனால் ஃபேஸ்புக்கில்   பேசலாமென்றால் இங்கும் எனக்காக உள்ள  இடத்தில்   நீ மனதை புண்படுத்தும் படியாக எதாவது உன் மனம் போன போக்கில்  எழுதி வைத்து உனது கருத்தை வெளிப்படுத்துகின்றாய். நண்பன் என்றால்  உதவிக் கரம் கொடுப்பவர்,உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும். நான் எழுதுவது உன் கருத்துக்கு உடன்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் ஒரு 'லைக்' போடு அல்லது மனம் புண்படாமல் உன் கருத்தை எழுதிவிடுவதுதான் சிறப்பு, அதை விடுத்து  என் மனதை நோகச் செய்ய முற்படாதே! உன் இடத்தில போய் நீ விரும்பியதை எழுதிவிட்டுப் போக உனக்கு அனைத்து உரிமையும் உனக்கு உண்டு. உன் உரிமை என் உரிமையை பாதிக்காமல் பார்த்துக்கொள். உனக்கு குடை பிடித்துப் போக உரிமையுண்டு ஆனால் அது என் மூக்கில் குத்தாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை .  நட்புக் கரம் நீ நீட்டும்போது உன்னை நான் நண்பனாக ஏற்று கொண்டேன் . நட்பை மறுப்பது கூடாது என்பதுதான் அடிப்படைக் காரணம் . உன்னை எந்த விதத்திலும்  தனிப்பட்ட முறையில் நான் எதையும் எழுதுவதில்லை என்பதனை நீ அறிவாய் . மற்ற எனது கருத்துகள் உனது கருத்தோடு ஒன்றிப்போக வேண்டிய அவசியமும் இல்லை அதனை நீ அவ்விதம் எதிர்பார்ப்பதும்  முறையல்ல என்பதனை நீ அறிய வேண்டும்.
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க.