Saturday, 13 April 2013

பேஸ்புக் (முகநூல் ) ஒரு ஈர்ப்பு சக்தி பெற்றது

அன்பு நண்பா,
தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ஒன்று கூடுமிடம் .உயர்வான இடம் . உயர்ந்தோர் மற்றும் சிறியோர் முதல் மூத்தோர் வரை வந்து ஆண் பெண் அனைவரும் சங்கமமாகி மனதில் உள்ளதை கொட்டி தன்னை உருவாக்குமிடம்.அதுவே சிலருக்கு உருப்படாமல் போக வழி வகுக்குமிடம் . நாடுவது கிடைக்கும் .துன்பமும் துயரமும் ,மகிழ்வும் அறிவும் இனாமாக இடைக்குமிடம் .கிடைப்பது அனைத்தும் அவரவரது நோக்கத்தைப் பொருத்து அமையும்

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(- ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் :1)

பேஸ்புக் நமக்காக நல்ல மனதோடு ஓர் இடம் தந்துள்ளது (ஃபேஸ்புக் பணம் ஈட்டுவது அதன் தொழில்) அந்த இடத்தை நேரம் கிடக்கும்போதேல்லாம் உள்ளத்தின் உணர்வுகள் உந்தப்பட்டு மனதில் உள்ளதைக் கொட்டி இதய பாரத்தைக் குறைக்க முற்படுகின்றோம்.நேரில் பேசும்போது வாக்குவாதம் வந்துவிடும் அதனால் ஃபேஸ்புக்கில்   பேசலாமென்றால் இங்கும் எனக்காக உள்ள  இடத்தில்   நீ மனதை புண்படுத்தும் படியாக எதாவது உன் மனம் போன போக்கில்  எழுதி வைத்து உனது கருத்தை வெளிப்படுத்துகின்றாய். நண்பன் என்றால்  உதவிக் கரம் கொடுப்பவர்,உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும். நான் எழுதுவது உன் கருத்துக்கு உடன்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் ஒரு 'லைக்' போடு அல்லது மனம் புண்படாமல் உன் கருத்தை எழுதிவிடுவதுதான் சிறப்பு, அதை விடுத்து  என் மனதை நோகச் செய்ய முற்படாதே! உன் இடத்தில போய் நீ விரும்பியதை எழுதிவிட்டுப் போக உனக்கு அனைத்து உரிமையும் உனக்கு உண்டு. உன் உரிமை என் உரிமையை பாதிக்காமல் பார்த்துக்கொள். உனக்கு குடை பிடித்துப் போக உரிமையுண்டு ஆனால் அது என் மூக்கில் குத்தாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை .  நட்புக் கரம் நீ நீட்டும்போது உன்னை நான் நண்பனாக ஏற்று கொண்டேன் . நட்பை மறுப்பது கூடாது என்பதுதான் அடிப்படைக் காரணம் . உன்னை எந்த விதத்திலும்  தனிப்பட்ட முறையில் நான் எதையும் எழுதுவதில்லை என்பதனை நீ அறிவாய் . மற்ற எனது கருத்துகள் உனது கருத்தோடு ஒன்றிப்போக வேண்டிய அவசியமும் இல்லை அதனை நீ அவ்விதம் எதிர்பார்ப்பதும்  முறையல்ல என்பதனை நீ அறிய வேண்டும்.
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க.

வேண்டாம் அருவருப்பு படங்கள்
வேண்டும் விறுவிறுப்பான நன்மை தரும் நற் செய்திகள்
வேண்டாம் அடுத்தவர் மார்க்கத்தை அசிங்கம் செய்யும் செய்திகள்
வேண்டும் அறிவு பூர்வமான ஆக்கங்கள்
வேண்டாததை விரும்பி நீங்கள் போட்டது காண காணாமல் செய்யும் உரிமை எனக்கு உண்டு
நட்புக்கு விரோதமல்ல. கொள்கைக்கு பிடிக்காதவை
உங்கள் பார்வைக்கு உயர்வாக இருப்பின் உங்கள் இடத்தில வைத்துக் கொள்ளுங்கள் ,அது உங்கள் உரிமை .உங்கள் உரிமை மற்றவர் உரிமையை பாதிக்க வேண்டாம் .குடை பிடியுங்கள்.அது என் மூக்கை குத்தாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை . கடமை இல்லாமல் உரிமை இல்லை

விளக்கம் கொடுங்கள்,பயம் காட்டாதீங்க .
நிலைமை மாறும் .ஒன்றின் இழப்பு மற்றொன்றின் வரத்து .இது நியதி .தேடுதல் மனிதனின் முன்னேற்றத்தின் ஒரு பகுதி .தேடினால்தான் கிடைக்கும் .தேடாமல் வந்தது தானே போய் விடும்.

என்றும் உன் நலம் நாடும் நண்பன்,
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Please click here to see the video SEASONS CHANGE AND SO DO WE

2 comments:

 1. /// குடை பிடியுங்கள்.அது என் மூக்கை குத்தாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை. ///

  புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்... நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரர் திண்டுக்கல் தனபாலன் கருத்துரை தந்தமைக்கு

   Delete