Tuesday 25 February 2014

முகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது

லைக் என்றால் விரும்புதல்
லைக் என்றால் போன்று (ஒரே மாதிரி )

நான் இதை லைக் செய்கிறேன்
நான் இதை லைக் செய்தமையால்
எனது கருத்தும் இதில் கண்டுள்ள கருத்தும் உடன் படுகிறது

நான் லைக் செய்து விட்டேன் இதை பார்த்தவுடன் ஆனால்
நான் முழுமையாக விரும்பவில்லை அதனால்
நான் எனது கருத்துரையை இங்கே தருகிறேன்
நான் எந்த அளவுக்கு விரும்புகின்றேன் மற்றும்
நான் எந்த அளவுக்கு மாறுபடுகின்றேன் என்பதனை
நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

நான் அதனை விரும்புகின்றேன்
நான் அதனைப் போன்று செயல்படுத்த விரும்புகின்றேன்
நான் அதனை வ்ரும்புவதால் எனக்கு என்ன ஆதாயம் !
நான் அதனை விரும்பவில்லையென்றால் எனக்கு என்ன பாதகம்!

நான்தான் அதனை விரும்பவில்லையே அதனால்
நான் அதனை கண்டுகொள்ளாமல் போய் விட வேண்டியதுதான்

நான் அதனை விரும்பவில்லை இருப்பினும்
நான் கண்டுகொள்ளாமல் போனால்
நான் தவறானதை திருத்தாமல் போனால் மற்றவர்கள்
நான் பொறுப்பில்லாமல் போவதாக சொல்வார்களே
நான் அதற்க்கு என்ன செய்வது ?

நான் நினைத்ததை சொல்லிவிட்டேன்
நான் செய்தது உங்களுக்கு லைக்கா அல்லது லைக் இல்லையா !

உங்கள் கருத்தை சொல்லி விடுங்கள்

ஒரு தவறு நடப்பின் தடுக்க வேண்டும்
தடுக்க முடியவில்லையென்றால் மனதளவிலாவது வெறுக்க வேண்டும்
நல்லதைக் கண்டால் உற்சாகம் கொடுக்க வேண்டும்


No comments:

Post a Comment