Tuesday 9 September 2014

உறவும் நட்பும்

நாளாகும் நட்பை வளர்க்க
நிமிடம் போதும் நறுக்க
---------------
நட்பு தொடர தொடர்பு
இருந்துக் கொண்டே
இருக்க வேண்டும்
---------------
உறவுகளை இறைவன் தந்தான்
இறைவன் அருளால்
நல்ல நட்புகளை
நாம் தெரிவு செய்வோம்

உயிரினங்களில் உயர்வானது மனித இனம்
உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்கும் மனித இனம்
உணர்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு வந்ததால்
உறவு முறையில் விரிசல் வர தொடக்கமானது
மனித இனத்தில் மேன்மையானது உறவும் நட்பும்
உறவையும் நட்பையும் தூரமாக்குவது பணமும் பொறாமையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்
அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
----------------------
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.

அல் ஃபுதைல் இப்னு அய்யாத் கூறினார், “நீங்கள் யாரிடமாவது நேசங்கொள்ள விரும்பினால் அவரை ஆத்திரப்படுத்திப் பாருங்கள். அவர் ஆத்திரத்திலும் நிதானமாய், பொருத்தமாய் நடந்துகொண்டால் அவரிடம் நட்பு கொள்ளுங்கள்”

உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984
-------------------------
உண்மையான நண்பன் நம்முடன் இருக்கும்பொழுது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகின்றது .
பொறுமை, பாசம்,அன்பு ,நேசம் ,விட்டுக்கொடுக்கும் மனது இருப்பின் நட்பு வளரும் .
உண்மையான நண்பன் யார் என்பதனை நமக்கு ஒரு சோதனை வரும்பொழுதான் அறிய முடிகின்றது .
மகிழ்வுக்கு உடன் வருவார் , துக்கத்திற்கு ஆறுதல் சொல்வார் ,அவசரத்திற்கு பணம் கேட்டால் ஓடி விடுவார் இவரையும் நண்பர் என்று எண்ணி இருந்து ஏமாந்து நிற்போம் .
நண்பா உன்னை நம்புகின்றேன் ,என்னுடன் வா .நீ இருக்கும்பொழுது என் மனம் மகிழ்வாகவும் அமைதியாகவும் இருகின்றது,
நண்பா எங்கிருந்தாலும் வாழ்க.
சுழலும் உலகில் சுற்றமும் ம் சுற்றி சுற்றி வரும்
நாமும் சுற்றி வந்து சுற்றத்தையும் நட்பையும் தேடிக் கொள்வதுதான் உயர்வாக முடியும்

No comments:

Post a Comment