Friday 3 April 2015

வட்டிக்கு விடுபவனும் மதுவை விற்பவனும் இல்லாமல் இருக்க வேண்டும்

மது அருந்துபவரைக் காண
மதம் பிடித்து வெறுக்காமல்
மது அருந்துபவரைத் திருத்து
மது அருந்துபவர் திருந்த இறைவனை வேண்டு (துவா செய் )
மது அருந்துபவர் சைத்தானிடம் அடைக்கலம் அடைய வேண்டாதே
குடியை வெறு
குடிப்பவரை வெறுக்காதே
குடிப்பவரும் தொழ வரச் செய்
குடிக்கும் பழக்கம் அவரை விட்டு நீங்க பிரார்தனை செய்ய சொல்லிக் கொடு
குடிப்பவனை விட குடிக்கக் கொடுத்து தொழில் செய்பவன் கொடியவன்
வட்டிக்கு வாங்குவதும் குற்றம்
வட்டிக்கு விடுபவன் பெரிய குற்றம் செய்கின்றான்
வட்டிக்கு விடுபவனும்
மதுவை விற்பவனும்
இல்லாமல் இருக்க வேண்டும்
----------------------------
நல்லவரும் நல்லதைச் சொல்வார்
கெட்டவரும் நல்லதைச் சொல்வார்
யார் சொன்னார் என்பதை விட
என்ன சொன்னார் என்பதே முக்கியம்
குடிகார தந்தை
குடிக்காதே என்று
தன மகனுக்கு அறிவுரை சொல்பது இயல்பு

No comments:

Post a Comment