Saturday 18 April 2015

உயர உயர பறந்தாலும் இருக்குமிடம் வருவதுதானே இயற்கை

இன்று வாழ்த்துவாய்
நாளை சாடுவாய்
நாளைய மறுநாள் வரவேற்பாய்

இன்றோ
நாளையோ
நாளைய மறுநாளோ
காலமெல்லாம்
உன் ஈர்ப்பில்
என்னை இருக்கச் செய்து விட்டாய்
உன் மனோநிலை மாறும்
என் மனோநிலையைக் கண்டு
என் மனோநிலை
எக் காலமும் உன்னில் அடக்கம்

உன் மனதை
நான் அறிந்ததால்
நான் உன்னை
என் உள் மனதில் நிறுத்திக் கொண்டேன்
நீ என்னை ஒதுக்கினாலும்
ஒதுக்குவது தற்காலிகமானதே
என நான் அறிவேன்

உயர உயர பறந்தாலும்
இருக்குமிடம் வருவதுதானே இயற்கை
என்னை விடுத்து
எவ்விடம் செல்வாய்
என்பதனை நான் அறிவேன்

No comments:

Post a Comment