Wednesday 12 February 2014

மனைவியை மகிழ்விக்க ..முக்கிய சிறு குறிப்புகள்

மனைவியை மகிழ்விக்க ..முக்கிய சிறு குறிப்புகள்

பாராட்டுங்கள்
கேட்பதை வாங்கி கொடுங்கள்
பிடித்ததை அறிந்து கேட்காமலேயே கொடுங்கள்
எங்கு போனாலும் சொல்லிச் செல்லுங்கள்
ஏன் போனாய் என்று கேட்காதீர்கள்
அடுததவர் வீட்டு சாப்பாடு ருசியாக இருந்தது என்று சொல்லாதீர்கள்
(வேறு எங்காவது விருந்து சாபிட்டு வந்து அந்த சாப்பாடு அருமையாக இருந்தது என்று வாய் தவறி உண்மையை சொல்லிவிட்டால் "ஆமா நான் சமைத்தாதான் உங்களுக்கு பிடிக்காதே" என்ற வார்த்தை வேகமாக, கோபமாக வந்து கொட்டும்.அதற்கு சமாதானம் செய்யவே நேரம் பத்தாது. )

அடிமைத்தனம் இன்னும் நாட்டில் அழிந்துவிடவில்லை
தனிமனிதன் துதி பாடுதல் இருந்துக் கொண்டே இருக்கிறது

அடுத்தவரை துதி பாடுவதை விட
அடுத்தவருக்கு அடிமையாய் இருப்பதை விட
மனைவியிடம் இருந்து விட்டால் வாழ்வில் மகிழ்வுதான்

நபி அவர்கள் கூறினார்கள்:

”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

"உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமை என்பது, உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது விரிப்பை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமை என்பது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஜாமிவுத் திர்மிதி)

“நம்பிக்கையாளர்களில் நம்பிக்கையில் (ஈமானில்) பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே! உங்களில் சிறந்தோர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தோரே!”(ஜாமிவுத் திர்மிதி)

“எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

“பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
-------------------
, “அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (அன்னிஸா 4:19)

1 comment:

  1. சிறு குறிப்புகள் அல்ல... அறிய வேண்டிய குறிப்புகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete