Monday, 30 June 2014

இதயத்தால் உயர்ந்தவர் உயர்ந்தவராவார்

இதயத்தால் உயர்ந்தவர் உயர்ந்தவராவார்
பணத்தால் ,பொருளால் உயர்ந்தவர் உயர்ந்தவர் அல்ல
பணமும் பொருளும் பெற்று கருணை மனம் பெற்றவர் உயர்ந்தவர்
பணமும் பொருளும் பெற்று கருணை மனமும் பெற்று மற்றவருக்கும் தந்து உதவுவர் உயர்ந்தவர்
பணமும் பொருளும் பெற்று கருணை மனமும் பெற்று மற்றவருக்கும் தந்து உதவி அதனை பெருமைப் படுத்தி புகழ் நாட விரும்புவர் உயர்ந்தவர் அல்ல
நோன்புக் காலம் உணர்த்தும் வாழ்வின் நெறிகள் நன்மையாக அமையட்டும்

Sunday, 29 June 2014

தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடை

நமது  உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .

சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .

Thursday, 26 June 2014

'விசாதான் ப்ரோப்ளம்'

விசா அந்த நாட்டில் நுழைவதற்கு
பாஸ்போர்ட் இந்த நாட்டிலிருந்து போவதற்கு

மிசாவிலிருந்து தப்பிக்க
விசா கேட்டால்
பைசா நிறையவே கேட்கிறான்

மிசா கிடைச்சாலும் கிடைக்கும் போல் இருக்கு
சில நாடுகளுக்கு போக விசா கிடைக்க சிரமமாய் இருக்கு

துபாய் போக விசா எடுக்கச் சொல்லி பணம் கொடுத்தேன்
துபாய்க்கு பறந்து விட்டார் விசாவை அவருக்கு எடுத்துக் கொண்டு

Wednesday, 25 June 2014

முதிர்ந்து உதிர்ந்த இடத்தில் இன்னொன்று உருவாகும்

முயற்சித்தேன்
முயற்சித்தது முடியவில்லை
முயற்சித்தது முடியாததால் முடங்கிப் போனேன்

முடங்கியதைக் கண்ட முதியவர்
முடங்கியதால் மூடனாகிவிடுவாய்
முடங்கியதால் ஒன்றும் அழிவதில்லை
முடங்கியவருக்கும் ஒன்று உயர்வாய் உள்ளது
முதிர்ச்சி பெற்று முயற்சி செய்
முடியும் யென்பதை மனதில் கொள்
முடியக் கூடியது முடிய நேரம் வர முடியும்
முற்சிப்பதே உன் கடமை
முடிக்க வேண்டியது இறைவன் வசமுள்ளது
முடிந்த வரை முயற்சி செய்
மற்றதை இறைவன் நாட்டப் படி நடக்கும்
நம்பிக்கையில் வாழ்வு வளம் பெறுமென்றார்

நெஞ்சில் கனத்தது



நெஞ்சில் கனத்தது
நான்கு வரிகளாக கொட்ட
நெஞ்சின் கவலை மறைய
இறைவன் நாடினால்
இனிய இரவை நிறைவாக
எனை மறந்து
கவலை மறந்து உறங்குவேன்

மையை கொட்டிய காரிருள்



மையை கொட்டிய காரிருள்
மின்னும் நட்சத்திரங்களின்
மின்மினிப் பூசசிகளின்
ஒளிச் சிதறல்கள் போல்

இருண்ட இதயத்தில்
அவ்வப்போது நம்பிக்கையின் ஊக்கங்கள்
வாழ்கையின் பிடிப்பை உறுதியாக்கின

இந்தியாவின் பண்மை தன்மை



இதில் எதை ஒதுக்க முடியும்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உயர்வு

பலதிறப்பட்ட மக்கள்
பல்வகையான மொழிகள்
மொழி கருத்து பரிமாற்றங்களுக்கு வந்தவை
தெரிந்த மொழியில் பேசு ,படி
தெரியவில்லையா
தெரிந்தவர்களின் உதவியை நாடு
மொழி மாற்றும் கருவிகளின் உதவியை நாடு

உன் மொழியையே அடுத்தவர் பேச வேண்டும்
என்ற அழுத்தத்தை கொடுத்து ஒற்றுமையை குறைக்காதே

பிரமலம் என்றால்



பிரமலம் என்றால்
பிரமலமானவரை அதிக மக்கள் அறிந்திருக்க வேண்டும்
பிரபலத்தில் இரு வகை
ஒன்று தவறான செயல்களால் வருவது
மற்றொன்று நற்செயல்களால் வருவது
தவறான செயல்களால் வரும் பிரபலம் ஒரே நாளிலும் கிடைக்கும்
நற்செயல்களால் வரும் பிரபலத்தை காலம் முழுதும் அதனை தக்க வைக்க வாழ்நாள் முழுதும் நல்லவர்களாக வாழ்வது அவசியம்.
பிரமலமான நிகழ்வு ஒரே சிறந்த செயல்களாலும் அல்லது தொடர் சிறப்பான செயல்களாலும் கிடைக்கும்

Tuesday, 24 June 2014

பாரிஸில் நான் எடுத்த படங்கள்









நினைவாற்றலுக்கு மனப் பயிற்சியும் அவசியம்.

அறிவு தொடர்ந்து கற்பதின் வழியாகவே அறிவின் ஆற்றல் மேன்படும் .கற்பதை நிறுத்த நினைவு ஆற்றல் குறையும். குழந்தைகளுக்கு மனனம் செய்யும் பயிற்சி நினைவு ஆற்றலை வளர்க்கிறது .வயதானவர்களுக்கு நினைவு சக்தி குறைவது இயல்பு .
உடல் நலம் பேணுவதும் ,ஆரோக்கியமான உணவு( மீன் உணவு நல்லது ) தொடர் உடற் பயிற்சியும், 'எதையும் நினைவில் வைத்துக் கொள்வேன்' என்ற மன உறுதியும் இருத்தல் வேண்டும். சிலர் ஒன்றை வைத்து ஒன்றை நினைவு படுத்திக் கொள்வர் .
உடற் பயிற்சி உடலுக்கும் நினைவு ஆற்றல் சக்திக்கும் உதவும்.
சிறு வயதில் மனனம் செய்வது உதவி இருக்கலாம் வளர்ந்தவர்களுக்கு தானே ஆக்கப் பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் .கவனக் குறைவு ,தவறான எண்ணங்கள், கவலையான நினைவுகள் ஞாபக மறதியை உண்டாக்கும்

புரள்வது நிற்கும் அது என் மூச்சு நிற்கும்போது.

வார்த்தைகள் விழுகின்றன
வரிகள் வருகின்றன
வாசிப்புகள் நிறைகின்றன
யோசிப்புகள் சேர்கின்றன
எங்கிருந்து கோர்வையாகின்றன
எனக்கே புரியாத புதிர்தான்

நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன்
ஒவ்வொரு நிகழ்வும் அதில் இருக்கும்
நாட்கள் பறக்கின்றன
பக்கங்கள் புரள்கின்றன.

நினைப்பதை ஒத்திப் போடுவதில்லை


கணினியை விட்டு நீங்கினால்
கணினியில் எழுதியது என்ன கேட்டால்
கணினியில் எழுதிய வரிகள் ஒன்றும்
மனக் கணினியில் மறந்து விடுகின்றது

நினைப்பதை ஒத்திப் போடுவதில்லை
ஒத்திப் போட்டால் ஓடிப் போய் விடுகின்றது

யார் தங்கள் கடனை அடைக்க நினைக்கின்றார்களோ
அக் கடனை அடைக்க ஆண்டவன் அருள் செய்வான்

Saturday, 21 June 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்

"நல்ல பொருள் உபயோகமாக இருக்கும் அதனை வாங்குங்கள்" என்று மனைவி சொல்ல
"பணம் இல்லை" நான் விளக்க .
"ஆமா நான் விரும்பி கேட்டாதான் பணம் இருக்காது" என்று மனைவி கோபம் அடைய .
"சரி என்ன செய்வது பணத்திற்கு"
"கடன் வாங்கியாவது வாங்குங்கள்" .
ஒ.கே வாங்கிடுவோம்

மயங்க வைக்கும் (ராஜ) மாளிகை கண்டு மயக்கம் வேண்டாம் !

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் -
பாரதியார் பாடல் நினைவுக்கு வரும். அவர் நல்ல மனதோடு அனைவருக்கும் மாளிகை கேட்டார். அது நமக்கு கிடைக்குமோ! கிடைக்காதோ! குறைந்தது குடிசை மாற்று வாரியம் வழங்கும் வீடு கிடைத்தால் போதும் என்ற மனதோடு இருந்தால் எப்படி?

இனாமாக தருபவர்கள் ஆதாயம் தேடுகிறார்கள்

கடைகளில் பொருட்கள் இனாமாக கிடைப்பதில்லை
சில நேரங்களில் தள்ளுபடி போட்டு விற்காத பொருட்களை விற்க முயற்சிப்பார்கள்
சில கடைகளில் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இனாம் என்பார்கள் ஆனால் அதன லாபத்தை ஒரு பொருளில் சேர்த்து விடுவார்கள்

அரசு இனாம் கொடுக்கும் நம்மிடமிருந்து பெற்ற வரியை வைத்து
அரசு இனாம் கொடுக்கவும் செய்யும் மக்களின் ஆதரவு பெற்று அடுத்த முறை ஆட்சிக்கு வர

இனாம்கள் ஆதாயத்தை வைத்தே நகர்கின்றன

Thursday, 19 June 2014

தேடுதலே வாழ்க்கையில் அங்கமானது





எப்போதும் எதையாவது தேடிக் கொண்டிருப்பேன்
எதையாவது வைத்த இடம் தெரியாது கொண்டிருப்பேன்

நேரம் கடந்த பின் எதைத் தேடுகிறோம் என்பதையும் மறந்து போவேன்
தேடுவதை எதை என்பதை அறிய சிறிது அமர்ந்து சிந்தனையில் தேடுவேன்

மறந்தது நினைவுக்கு வர தேட வேண்டியதை தொடர்வேன்
விவரம் அறிந்த நாளிலிருந்து தேடுவதிலேயே காலம் ஓடுகின்றது

மறந்ததை தேடுவதிலேயே நேரம் போதாமையால்
மறக்காமல் மனதில் நிறுத்தி செயல்படுத்துவதை தேடாமல் போனேன்

தேடுவது வாழ்க்கையில் அங்கமான எனக்கு
வாழ்வில் தேடுவதில் உய்ர்வானதை அறியாமல் போனது வேதனையானது

இதயம் இருந்தும் இறக்கம் இல்லாதவர்களாய் இருந்து என்ன பயன்

இதயத்தை பெண்ணொருத்திக்கு கொடுத்து உயிர் நீத்தான்
இரு கண்களையும் கொடுத்தான்
இரு கிட்னியையும் கொடுத்தான்
இறப்பதற்கு முன் அவனது தாய் அவனது உறுப்புகள் அனைத்தையும் கொடுக்க அனுமதி கொடுத்தாள்
அவன இன்னும் இவ்வுலகத்தில் வாழ்வதாக நினைத்து
இதயம் கசிய சொல்கின்றாள்

இதயம் நோக இன வேறுபாடு பார்த்து நிற்கும் இவ்வுலக மக்கள் இருந்து இன்னும்
எத்தனை இதயத்தை அழிக்கப் போகிறார்களோ !

இதயம் இருந்தும்
இதயம் இல்லாத மக்களாய் உலா வரும் கொடியோர்களே
இதயம் இருந்தும் இறக்கம் இல்லாதவர்களாய் இருந்து என்ன பயன்
நீங்கள் விரும்புபவரை ,இறைவனாக மதிப்பவரை துதி பாடி என்ன பயன்

Saturday, 14 June 2014

விரும்பியதை சொல்லி விட்டேன்


விரும்பியதை சொல்ல வெட்கப் படுபவர்களுமுண்டு
விரும்பியதை சொன்னால் வெட்கக் கேடு என்று நினைப்பவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லாமல் போனதால்
விரும்பி நினைத்தது நடக்காமல் போனதே என்று வருந்துபவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லிக்காட்டுபவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லிச் செய்து முடிப்பவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லாமல் செய்து முடிப்பவர்களுமுண்டு

ஓடிக் கொண்டிருந்தவன் நின்றுதான் ஆக வேண்டும்
நின்றுக் கொண்டிருந்தவன் அமர்ந்துதான் ஆக வேண்டும்
அமர்ந்துக் கொண்டிருந்தவன் படுத்துதான் ஆக வேண்டும்
பிறந்தவன் இறந்துதான் ஆக வேண்டும்

தடையற்றதுமில்லை
தடம் புரண்டு போவதுமுண்டு
தடைக்கும் தடம் புரண்டு போவதற்கும் பயந்து
தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவன்
பிறப்பின் மகிமை அறியாதவன்

Friday, 13 June 2014

மரணத்தை எதிர்பாராத விபத்தினால் வரும் நிலையை எங்களுக்கு தந்துவிடாதே!

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்
வேண்டுதல் வேண்டப்படுபவர்காளாய் நாங்கள் இருக்கிறோம்

பெறுதல் பெறப்படாதவனாய் நீ இருக்கிறாய்
பெறுதல் பெறப்பட்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்

பிறப்பும் இறப்பும் உனக்கில்லை
பிறப்பும் இறப்பும் உன்னால் நாங்கள் பெற்றோம்

வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன்!

நெடு காலம் வாழ வேண்டும்
நெடுங் காலம் நல்வாழ்வு வாழ வேண்டும்

நின் அருள் பெற வேண்டும்
நின் அருளைக் கொண்டு மற்றவருக்கு உதவ வேண்டும்

உழைத்து தேட வேண்டும்
தேடியதை பகிர்ந்து அளிக்க வேண்டும்

வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன்
இறைஞ்சுவதை உன்னிடமே இறைஞ்சுவேன்

Wednesday, 11 June 2014

திருமணத்திற்கு முன்பும்! திருமணத்திற்கு பின்பும் !

திருமணத்திற்கு முன்

உன்னை மிகவும் நேசிக்கின்றேன்
உனக்காக எதுவும் செய்யவேன்
உனக்காக உயிரையும் விடுவேன்
உன் மடியில் உயிர் பிரிய விரும்புவேன்.
நமக்குள் கருப்பு சிகப்பு தடையில்லை .
நம் திருமணம் உனது பெற்றோர்கள் விரும்ப நிகழும்
நம் திருமணம் நிகழ பணமோ பொருளோ தடையாகாது இருக்காது
=============

இது முடியுமா! என்று பையன் கேட்கிறான்!

                                                                    பட source
இதயம் அழுகிறதாம்
மனம் விரும்புகிறதாம்
கண்கள் பேசுகிறதாம்
பையன் கேட்கிறான்
இது முடியுமா! என்று !

நடக்காதெல்லாம் நடக்கும் போது
இது மட்டும் நடக்காதா ! என்றேன்

நீ கவிஞனாக வந்தால்
அது நடக்குமென்றேன்

Tuesday, 10 June 2014

படிக்க வைக்க அவ்வளவு கடினமா !

படிக்க வைக்க அவ்வளவு கடினமா !

பத்திரமாய் போய் வரச் சொன்னார்கள்
பத்திரத்தை வைத்து படிக்க கடன் வாங்கி வரும்போது

பத்திரமாய் பள்ளிக்கூடம் சென்று வா
பள்ளிக்கூடம் சென்று வரும் வழியில்
பாதையில் விபதுக்குள்ளாகாமல் வந்து சேர்

பையனுக்கு படிப்பு வராது என்பதை யார் சொல்ல வேண்டும்!


பையனுக்கு படிப்பே வரவில்லை
பையன் வீட்டில் பேசுவது தமிழில்
பையன் படிப்பதோ ஆங்கில மொழியில்

பையனுக்கு படிப்பு வராது என்பதை யார் சொல்ல வேண்டும்
பையனுக்கு படிப்பு வராது என்பதை மனோதத்துவ மருத்துவர் சொல்லுவாரா !
பையனுக்கு படிப்பு வருமென்பதற்கு விளக்கங்களை கொடுப்பார்

பொதுவாக ஆங்கில மொழியில் படிக்கும் பையனுக்கு
தமிழும்,கணிதமும் கடினமாக இருப்பது இயல்பு

இறைவனை நினைத்து அவன் நினைவோடு ஒன்றி தொழுவது மகிழ்வு

மகிழ்வு
வாசனைப் பொருளை நாம் வைத்திருக்க
வாசனை திரவத்தை நம் ஆடையில் தடவிக் கொள்ள
அவைகளை மற்றவர்களுக்கும் பகிர்தளிக்க
மணமும் தந்து மனமும் மகிழ்கின்றது

இறைவனை நினைத்து அவன் நினைவோடு ஒன்றி தொழுவது
மறைந்து விடும் மேகங்கள் சிறிது நேரம் நின்று மழையைக் கொட்ட அதில் நனைந்து மகிழ்வது
எழுதியது எதிர்பாராமல் பத்திரிகையில் வந்ததால் அதனை மற்றவரிடம் காட்டி மகிழ்வது
தேர்வில் ,போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றதால் அடுத்தவர்கள் நம்மை பாராட்டுவதால் மகிழ்வது
குழந்தைகளுக்கு புதிய பொருட்களை கடையில் வாங்கிக் கொடுப்பது

Saturday, 7 June 2014

இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இறையியல் 'உலமா' பட்டம் பெற்றதால் மட்டும் மதிக்கப் படுவது கிடையாது

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இஸ்லாமிய கல்வி போதிக்கும் பாடசாலைகளில் (மதரஸாக்களில்) மார்க்க அறிவு போதிக்கும் போது மார்க்க முறைப்படி வாழவும் பயிற்சிக்கப் படுகின்றது . சில ஆண்டுகள் கற்ற பின்பு போதிய அளவு மார்க்க அறிவு பெற்ற பின்பு தேர்வு நடத்தி அதில் மதிப்பெண்கள் பெற்ற பின்பு அந்த உலமா' பட்டம் (சனது) கொடுக்கின்றார்கள்.

Wednesday, 4 June 2014

துணையே துணிவைத் தரும் வேண்டாததைத் தடுப்பதற்கும்

என்னுள் இருப்பதை நானே அறியமுடியவில்லை
உன்னுள் இருப்பதை நான் அறிய முயலவில்லை

என்னுள் இருப்பதை அறிந்தால்தான் இணைவேன் என்கிறாய்
என்னுள் இருப்பதை அறிய முயன்றால் என்னோடு இணைய மாட்டாய்

என்னுள் இருப்பதை அறிய உன்னாலும் முடியாது
என்னுள் இருப்பதை அறிய உன்னைச் சார்ந்தவர்களாலும் முடியாது

இறைவனை அறிந்திடு.

உண்ணும் சோறு அரிசியிலிருந்து வந்தது
அரிசி நெல்லிருந்து வந்தது
நெல் நெர் பயிருலிருந்து வந்தது
நெர் பயிரு வளர நீர் தேவைப் பட்டது
நீர் மழையாக கொட்டியது
மழையாக கொட்டிய நீர் பூமியில் சேர்ந்தது
ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளது
ஆய்வை தொடர அது முடிவில்லாமல் தொடர்கின்றது
முடிவை அறிய அனைத்துக்கும் மேல் ஒரு சக்தி உள்ளதை அறிய முடிகின்றது
ஆய்வை தொருங்கள் தெளிவு கிடைக்கும்

தான் பெற்ற பிள்ளையானாலும் ..

நாம் பெற்ற பிள்ளையை அடுத்தவர் மத்தியில் கண்டிப்பதையோ அல்லது தண்டிப்பதையோ அவன் விரும்புவதில்லை .
அவ்விதம் செய்ய உறவு விரிவு படுகின்றது .

இந்நிலையில் அடுத்தவரை கேவலப் படுத்துவதும் ,தூற்றுவதும் யார் ஏற்றுக் கொள்வார் . விரோதம் அதிகமாகும்

நீர் பெற்ற அறிவு மக்களை நல்வழி படுத்த மற்றும் நேர்வழி படுத்த உதவட்டும் .அது உன்னிடமிருந்து ஆரம்பிக்க நீர் உயர் வாழ்வை முதலில் பெற்றுக் கொள்

Sunday, 1 June 2014

மக்கள் விரும்பியது இறைவனால் விரும்பாமல் போனது

லைக் கொடுத்தது மக்கள்.அன்லைக் செய்தவன் இறைவன்.

நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்க்கவில்லை

நீ என்னைப் பாராமையால்
நான் உன்னை பாராமல் போகவில்லை

நீ எழுதிய வரிகள் அனைவரையும் கவர்ந்தது
நான் எழுதிய வரிகளும் அனைவர்களாலும் கவரப் பட விரும்பினேன்