Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Sunday, 1 June 2014

மக்கள் விரும்பியது இறைவனால் விரும்பாமல் போனது

லைக் கொடுத்தது மக்கள்.அன்லைக் செய்தவன் இறைவன்.

நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்க்கவில்லை

நீ என்னைப் பாராமையால்
நான் உன்னை பாராமல் போகவில்லை

நீ எழுதிய வரிகள் அனைவரையும் கவர்ந்தது
நான் எழுதிய வரிகளும் அனைவர்களாலும் கவரப் பட விரும்பினேன்

Monday, 21 April 2014

அனைத்தும் நம் செயலால் வந்த வினை

நேற்று முடிந்தது
முடிந்தது முடிந்ததுதான
வருவது நிச்சயமில்லை

நடப்பது நிகழ்வது
நடப்பது நினைவோடு நகர்வது
நிகழ்வதை மகிழ்வோடு நகர்த்துவோம்

நேற்று நடந்தவை நல்லதும் அல்லதும் கலந்த கலவை
நேற்று நடந்த நல்ல நிகழ்வை நினைத்து மகிழ்வோம்
நேற்று நடந்த கெட்ட நிகழ்வை வைத்து பாடம் பயில்வோம்

Saturday, 29 March 2014

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்!

இறைவன் இட்ட கடமையை நிறைவேற்றுவோம்

இறைவன் கொடுத்த மறைவழி வாழ்ந்து நிற்போம்

இறைநபி வாழ்ந்த வழி நம் வாழ்வின் வழியாகும்

இறையருள் நாடி இறைவனை இறைஞ்சி வாழ்வோம்

இறையருள் நாட நேரம் ஒதுக்க வேண்டாம்

இருக்கும் நேரமெல்லாம் இறையருள் நாடும் நேரமாகும்

இறையருள் கேட்க இறைமறை சொற்களே உய்ர்வானதாம்

இறையருள் கேட்க்கும் பொழுதினிலே இயல்பாய் இருத்தல் சிறப்பாகும்

இறையருள் கேட்க மனனம் செய்து வேண்டுதல் செயற்கையாய் இருந்துவிடும்

Tuesday, 18 March 2014

இறைவனை இறைஞ்சு இன்ஷா அல்லாஹ் இனியவை நிகழும்

எல்லா நிலைகளிலும் இன்னிலையில் இருக்கப் போவதாக நினைக்கிறாய்
இல்லா நிலையிலிருந்து இன்னிலைக்கு உருவாக்கியவனை நினைக்க மறந்தாய்

எவ்வழியில் போவதென்றும் அறிந்தவனாய் இல்லை
எவ்வழியிலிருந்து வந்தவனென்று அறிந்தவனாய் இல்லை

உயிர்பெற்று விழும்போது கதறினாய்
உயிரற்று விழும்போது கதறுவார்கள்

உயிரோடு விழும்போது தாங்கிப் பிடித்தது பூமி
உயிரற்று விழும்போது விழுங்க வைத்து மூடி விடுவர் பூமியில்

ஆத்மா நிலையிலிருந்து ஆன்மா நிலைக்கு மாறினாய்
ஆன்மா நிலையில் உனை உயர்வாக்கிக் கொள்ள
ஆத்மா நிலையில் உயர் நிலையில் வாழ்ந்து விடு
ஆன்மாவும் ஆத்மாவும் இறைவன் அருள் பெற உயர்வாகி விடும்

Saturday, 22 February 2014

தேடும் படலம் தொடர்கின்றது


குழந்தைப் பருவத்தில் விளையாட்டுப் பொருளைத் தேடினேன்
பள்ளிப் பருவத்தில் நண்பர்களைத் தேடினேன்
கல்லூரிப் பருவத்தில் அறிவைத் தேடினேன்
படித்தபின் வேலையைத் தேடினேன்
மணமுடிக்க பெண்ணைத் தேடினேன்
வளமாக வாழ பணத்தை தேடினேன்
தேடும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தேடியதில் சில கிடைத்து தொடர்ந்து வந்தது
தேடியதில் கிடைத்த சில தொல்லையை கொடுத்தது
தேடாததும் சில சேர்த்துக் கொண்டது
தேடுவதில் சில மகிழ்வைத் தந்தது
தேடுவதில் சில வருத்தத்தை தந்தது
தேடவேண்டிய சிலவற்றை தேடாமல் விட்டேன்
தேடவேண்டிய நேரத்தில் தேடாமல்
தேடியது கிடைக்காமல் போனது
தேடுவதே வாழ்க்கையின் பகுதியானது
தேட வேண்டியதை தேடாத நேரமில்லை

Friday, 21 February 2014

தலைவன் இறைவன் (மட்டுமே

முழுமை இறைவனுக்கு மட்டும்
முழு புகழும் இறைவனுக்கு மட்டும்

அளவுகோல் இல்லை இறைவனை புகழ்வதில்
அளவுகோல் உண்டு மனிதனை புகழ்வதில்

மனிதனை புகழ்வதில் தவறில்லை
மனிதனை புகழ்வதில் உண்மை வேண்டும்

இல்லாததைப் புகழ்ந்து
வஞ்சகமாக வலை விரிக்க
வஞ்சகப் புகழ்ச்கி யாக்கி
கெட்டவனை மேலும் கெட வைக்க
வஞ்சக மனம் கொண்டோர் இயல்பு

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது

ஆனந்தத்தை அறுவடை செய்ய ஆளாக்கிக் கொண்டவன் நீ
துன்பத்தில் துவண்டு சுழல்பவன் நீ

சிறியதை பெரிதாக்க முயல்பவன் நீ
பெரிதானதை சிரிதாக்கியவனும் நீ

உன்னை உருவாக்கிய உயர்ந்தவனை மறந்தவனும் நீ
பணத்தை பெரிதாக நினைப்பவனும் நீ

அகங்காரத்தை தன்னகத்தே கொண்டவனும் நீ
உனைப் பெற்ற பெற்றோரையும் மறந்தவன் நீ

உனது நரம்புகள் உனது ஆணைக்கு உட்படாது
உன்னால் வந்தவர் உனை ஒதுக்கி நிற்பார்
உன்னையே நீ அறிவாய்
உனக்கு உதவ ஒருவரும் வர மாட்டார்
உழன்று பிரண்டாலும் போனது போனதுதான்

Thursday, 9 January 2014

இறைவன் மன்னிப்பானா!


தவறு செய்தவர் இறைவன் மன்னிப்பு நாடி இறைவனின் தயை தேடட்டும்
தவறு செய்தவர் மற்றவருக்கு அந்த தவறை செய்தால் தவறால் பாதிக்கப் பட்டவர் மன்னிப்பது அவசியம்.
பாதிக்கப் பட்டவர் மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான் .
(கடன் அடைக்கப் படும்வரை ,ஒருவரை மனம் நோக பேசுதல் மற்றும் பல )

தனக்குத் தானே ஒருவர் தவறு செய்து விட்டால் இனி எந்த பாவமான தவறுகளை செய்ய மாட்டேன் என்ற
மனஉறுதியோடு இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
அது இறைவனுக்கும் அவருக்கும் தொடர்பு கொண்டது அது கடமையானதாக இருந்தாலும்.

Monday, 2 December 2013

அறிவைத் தேடு ஆண்டவனை அறிய

ஆண்டவனை அறிந்தால் ஆண்டவன் காட்டிய வழி நடப்பாய்
ஆண்டவன் காட்டிய வழி நடந்தால் வாழ்வின் மகத்துவம் அறிவாய்

வாழ்வின் மகத்துவம் அறிந்தால் வாழ்வை உயர்வாக்கிக் கொள்வாய்
வாழ்வை உயர்வாக்கிக் கொண்டால் வாழும் வாழ்வு சிறப்பாகி விடும்

வாழ்ந்த வாழ்வு சிறப்பானால் இறைவனது நேசம் கிடைக்கும்
இறைவனது நேசம் கிடைத்தால் சுவனத்தின் வழி கிடைக்கும்

சுவனத்தின் வழி கிடைத்தால் வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாகிவிடும்
வாழ்ந்த வாழ்வு பரிபூரணமாக்கிவிட்டால் இறைவன் தந்த வாழ்வு நிறைவாகிவிடும்

இறைவன் தந்த வாழ்வை நிறைவாக்கிவிட்டால் இறைவனை அறிந்தவன் ஆனாய்

Tuesday, 1 October 2013

விருப்பம் ஒன்றிருக்க வெறுப்பை நாடுவதேன்!

நான் உங்கள் கருத்தை விரும்புகிறேன்
நான் உங்கள் சில கருத்தை விரும்பவில்லை
நான் உங்கள் கருத்தை விரும்பவில்லை ஆனாலும் மாற்றுக் கருத்து சொல்ல விரும்பவில்லை

நான் மாற்றுக் கருத்து கொண்டிருந்தால் என் கருத்தை உங்கள் கருத்தோடு இணையாமல் தனியே தெரிவிப்பேன். அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதில் அல்ல

Friday, 13 September 2013

'ஓ' வென கதறி அழுதேன்

"And He gave you of all that you asked for, and if you count the blessings of Allah, never will you be able to count them…" Al Quran (14:34

இதயக் கோளாறு வந்தது
இதய அறுவை அவசியமென்றார் மருத்துவர்
இதய சிகிச்சை சிறப்பாக முடிவுற்றது
இதய அறுவையை முடித்து மருத்துவர் செலவுக்கான தொகையைச் சொன்னார்

இதயமே வெடித்துவிடும் போல் 'ஓ' வென கதறி அழுதேன்
இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆறுதல் சொல்லி சிகிச்சைதொகையை குறைக்கச் சொன்னார்

நான் மருத்துவரிடம் சொன்னேன் ' உங்கள் சேவைக்கு நன்றி தெரிவித்தேன் மற்றும் உங்கள் சிகிச்சைக்கு கொடுக்கும் தொகைக்கு நான் அழவில்லை . எழுபது ஆண்டு காலம் எனது இதயத்தை சீராக ஓட வைத்த எனை படைத்த இறைவனுக்கு இத்தனை ஆண்டுகளாக நன்றிக்காக அவனை தொழுது வராமல் இருந்தோமே! என நினைத்து என் மனம் குமுறுகிறது மனதை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன்' என்றேன்

கண்களில் கசியும் நீர் உயர்வானது


அழுகை இயற்கையாய் கொட்டும் மழை
மனதை இயல்பாய் வைத்திருக்க இமைகளில் வழியும் நீர்
கண்களில் ஊரும் நீர் ஒரு கேலன் நீருள் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றது
கண்களை பாதுகாப்பது விழிகளில் ஊரும் நீர்
மனதின் பாரத்தை,சோகத்தை நீக்க அழுகை உதவுகிறது
அழுகை இயற்கையாக வர மனம் அமைதி பெறுகிறது
அழுகை ஒப்பாரியாகவும் ,ஓலமாகவும் வர அழுகை தன் இயல்பை இழக்கின்றது
மனிதனைத் தவிர மற்ற இனங்கள் தன் உணர்சிகளை கட்டுப்படுத்துவதில்லை
மனிதன் மட்டும் அனைத்தையும் கட்டுபடுத்த அவனுக்கு பல வியாதிகள் வருகின்றது
மனிதன் அனைத்து உபாதைகளையும் கட்டுபடுதுகின்றான்
அழுகையை அடக்குகின்றான்
சிரிப்பை முடக்குகின்றான்
மகிழ்வை காட்டுவதிலும் நேரம் பார்க்கின்றான்
சிறுநீர் வருவதையும் நிறுத்தி வைக்கின்றான்
இறுதியில் வரக் கூடாத வியாதி வந்து வேதனைப் படுகிறான்
உணர்ச்சி இறைவன் தந்த அருள்
மகிழ்வான உணர்ச்சியின் காரணமாக வருவது ஆனந்தக் கண்ணீர்
அடக்க முடியாத சிரிப்பால் வரும் ஆனந்தக் கண்ணீர் ஆரோக்கியமானது
துயரத்தால் வரும் அழுகை மனதை எளிமையாக்குகிறது

Saturday, 31 August 2013

நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்


அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

இறைவா! நீ தனித்தவன் இதனை யாரும் அறிவார்
இறைவா! நான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்
இறைவா ! நீ அருளாளன் கருணை மிக்கவன்
இறைவா ! நான் உன்னருள் நாடி யாசிக்கிறேன் ,உன் அருள் நாடி நிற்கிறேன்
இறைவா ! நான் நல்லது ,கெட்டது அறிந்துக் கொள்ளும் ஆற்றலைத் நீ தந்து விடு!
இறைவா ! ஞானத்தை தந்து நன்மையான வழியில் வாழச் செய்துவிடு
இறைவா ! நான் தவறு செய்தால் அது எனது அறியாமையால் வந்த வினை
இறைவா ! நான் நன்மை செய்திருந்தால் உன் கருணையின் வெளிப்பாடு
இறைவா ! நீ விரும்பியபோது என்னை அழைத்துக் கொள்
இறைவா ! நான் உன்னிடம் வரும்போது நன்மையுடன் வரவேண்டும்
இறைவா !அனைத்தையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! நன்மை ,தீமை பகுத்தறியும் திறனையும் நீதான் கொடுத்தாய்
இறைவா ! தீயோர் திரண்டு நிற்கும் நின்றதால் என்னை யறியாமல் தீமைகள் என்னிடம் வந்திருந்தால் மன்னித்துவிடு
இறைவா !உன் அருள் மழைவேண்டிஇறைஞ்சுகின்றேன் .

Sunday, 4 August 2013

இறைவன் தேவையற்றவன்

இறைவன் தேவையற்றவன்
இறைவனின் அடியான் தேவையுடையவன்
இறைவனின் அடியானுக்கு இறைவனே தேவையுடையவன்
இறைவனே அனைத்தையும் படைத்தான்
இறைவனால் படைக்கப் பட்டவன் இறைவனிடத்தே யாசிப்பான்
இறைவனை யாசிப்பவன் இறைவனையே  தொழுது நிற்கிறான்
இறைவனை தொழுது நின்று யாசிப்பவன் இறைவன் அதனை ஏற்க வேண்டுகிறான்
இறைவனை அருள் வேண்டி இரவெல்லாம் தொழுது ஏங்கி நின்றாலும் இறைவனது அருள் அவன் நாடியவருக்கே கிடைக்கும்
இறைவன் இறக்கம் கொண்டவன்
இறைவனை நாடியவருக்கு இறைவன் நன்மையை தர தயங்குவதில்லை
இறைவன் தருவதும் தராமல் இருப்பதும் நன்மையாகவே அமையும்

Thursday, 1 August 2013

நீ விரும்பியபோது உன்னிடத்தில் உயர்வாய் அழைத்துக்கொள்!


ஒரே வாழ்க்கை இவ்வுலகில் தந்தாய்
ஒரே வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறச் செய்தாய்

உயர்வு வரும் நிலையில் உனை மறந்தேன்
உயர்வு வருவது என் உழைப்பால் வந்ததாக கர்வம் கொண்டேன்

தாழ்வு வரும் நிலையில் விதியால் வந்த வினையாக நினைத்தேன்
தாழ்வு வந்த போது உனைநினைத்து உளமார உன்னுதவி நாடினேன்

'உயர்வு வந்த போது எனை மறந்தாயே' என என் வேண்டுதலை நீ நிகாரிக்கவில்லை
உயர்வு நிலையில் உள்ள உனக்கு சிறிய மனமில்லை

உனை நாடுவோர்க்கும் உனை நாடாதோர்க்கும் இவ்வுலகில் உன்னருள் கிட்டும்
உனை நாடி உன் வழி நடந்தோர்க்கு மட்டும் சுவனம் கிட்டும்

Sunday, 16 June 2013

இருட்டில் இருக்கிறது இதயம்


இருட்டில் இருக்கிறது இதயம்
இதயத்தில் இருக்கிறது மூச்சு
முச்சில் இருக்கிறது உயிர்
உயிரில் இருக்கிறது குடும்பம்
குடும்பத்தில் இருக்கிறது பாசம்
பாசத்தில் இருக்கிறது மகிழ்வு
மகிழ்வில் இருக்கிறது வாழ்க்கை
வாழ்கையில் இருக்கிறது நேசம்
நேசத்தில் இருக்கிறது நன்மை
நன்மையில் இருக்கிறது சுவனம்
சுவனத்தில் இருக்கிறது இறைவனது அன்பளிப்பு

இதயம் இருட்டாகிவிட்டதே
இறக்கம் இதயத்தை விட்டு அகன்று விட்டதே
அறிவிலும் இருட்டு சூழ்ந்து விட்டதே
பார்வை குறைந்து  இருட்டாகத் தெரிகின்றதே

Monday, 10 June 2013

யார் அந்த வீரன் !

உன் தந்தை சொல் கேட்டு மதி கெட்டேன்
உன் தந்தைக்கு உணர்ச்சி கொப்பளிக்கும்
உன் தந்தைக்கு உணர்ச்சியை அடக்கும் மனமில்லை
உன் தந்தைக்கு செயல் வேண்டும்
உன் தந்தைக்கு செயலின் விளைவின் அருமை விளங்கவில்லை
உன் தந்தை சொல் கேட்டு அத்தனை தடை போட்டேன் நீ வராமலிருக்க
நம் இறைவன் அத்தனை தடையும் உனக்கு எளிதாக்கி உடைக்க வழி செய்தான்
உன் ஆற்றலால் உட்புகுந்தாய்
உட் புகுந்த உனை உயிராக உருவாக்கினேன்
உன் நேரம் வந்து உலகில் உயர்வாக  உயிர் பெற்றாய்
உனைக் கண்டு உளம் மகிழ்ந்து உயர்வாய் உனைப் போற்றுகிறார்
வேண்டாம் என்றவனை விரும்பி விரும்பி கொஞ்சுகின்றார் உன் தந்தை
வீரனாய் உட்புகுந்து வீரனாய் வெளிவந்து விரும்பியனாய் வந்தவன் நீ
எல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்!
நீ தானடா உண்மையான வீரன் என் அருட் செல்வமே !

 -------------------------------------------------------------------------------------------
தமிழில் தர்ஜமதுல் குர்ஆனை முதன் முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ,சிராஜுல் மில்லத் ஆ.கா.அ . அப்துஸ் சமது அவர்களின் தந்தை ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி. அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப் பற்றி தங்களது கருத்து என்ன என்று கேட்டாராம். அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் "இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம்" . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும் இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

Wednesday, 22 May 2013

முயல்வது நம் கையில். முடிவு இறைவன் நாடியது

 (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் - .குர்ஆன்-1:5


முயல்வது நம் கையில். முடிவு இறைவன் நாடியது . நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் இறைவனின் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். ஆண்டவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவன் வசம் உள்ளது . முயற்சி செய். முடிவை ஆண்டவன் வசம் விட்டு விடு. நாம் தேவை இல்லாமல் படைக்கப் படவில்லை. நாம் நம் கடமையினை   செய்தே ஆக வேண்டும் .செய்யத் தவறினால் 'உனக்கு இத்தனை ஆற்றல் கொடுத்தேனே ஏன் அதனை பயன் படுத்தாமல் விட்டு விட்டாய்' என்ற கேள்விக்கு நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

 நம் தாய் மர்யம்(ஸ.ல்) அவர்கள் ஈஸா நபியினை  ஈன்றடுத்தபோது பசி வந்து இறைவன் அருள் நாட நீ அந்த பேரித்தம் மரத்தினை குலுக்கு பழம் கொட்டும் அதனை எடுத்து உன் பசியினை ஆற்றிக்கொள் என இறைவன் சொன்னான். இறைவன் நினைத்தால் பசி இல்லாமலோ அல்லது பழம் தந்தோ பசியைபோக்க உதவியிருக்கலாம்.

 "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

-குர்ஆன் -19 : 25


 இறைவன் ' என்னிடம் நாடு அதே சமயம் உனது முயற்சியையும் மேற்கொள்' என்று நினைவுபடுத்துகின்றான். இதுதான் நாம் கடைபிடிக்க வேண்டியது.

 செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Saturday, 13 April 2013

'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் '

மன்னரின் ஆட்சி மிகச் சிறப்பாக இருந்தும் மன்னரின் மனதில் மகிழ்வில்லை.ஞானம் பெற ஞானியை தேடிச் சென்றார் . தம் மனதில் மகிழ்வில்லை அதற்கு நல்வழி சொல்லுங்கள் என ஞானியிடம் விரும்பிக் கேட்டார்
'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் ' என ஞானி சொல்லிவிட்டு அந்த இடத்தை வீட்டு அகன்றார் .
மன்னர் மனதில் விரக்தி வர இவ்வளவு தூரம் வந்து இவருக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்து வந்து பார்த்தோம் முறையாக அறிவுரைக் கொடுக்காமல் சென்று விட்டாரே என்ற வருத்தத்தோடு தனது அரண்மனைக்கு திரும்பினார். அவர் மனதில் அது உறுத்திக் கொண்டிருக்க தனது மந்திரியை அழைத்தனுப்பி மன்னர் தன் வருத்தத்தை தெரிவித்தார்.

Saturday, 6 April 2013

ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.

  இறையில்லங்களில் சுதந்திரமாக  தொழுகையில் ஈடுபட.நடத்தப்பட இடமளித்தல் வேண்டும் . அவற்றை தடுப்பதற்குஎவருக்கும் அதிகாரமில்லை .அதுபோன்றே வணக்கத்தலங்களில் பணிவுடன் அச்சத்துடன் நுழைதல் வேண்டும்.இறையில்லங்களை அவமதித்தல் கூடாது.
 
 பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வர தடை செய்தல் பெரிய குற்றமாகும். இந்நிலை நீடிக்குமானால் பிரிவுகளை உருவாக்குவதற்கு நாமே வழி வகுக்கின்றோம். இதனால் தேவையில்லாமல் பிரிவுக்கு ஒரு பள்ளிவாசல் உருவாகின்றது.

ஒருவரது உள்ளத்தில் எத்தகைய எண்ணம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.  தொழுகைக்கு வருபவர் அவர் முஸ்லிமாக இருந்தால் அவரை அனுமதித்தே ஆக வேண்டும். ( தொழுகைக்கு வரும்போது (மதுவை குடித்து வரக் கூடாது. அவ்விதம் இருப்பின் அவரை வெளியேற்றலாம் மற்றும்  தொழுகைக்கு இடையூராக இருப்பவரையும் வெளியேற்றலாம்)

தொழுகைக்கு வருபவர் ஒலு செய்திருக்க வேண்டும் .   அது அவரது கடமை .ஒழு இல்லையேல் தொழுகையே  கூடாது. ஆனால் நாம் யாரிடமும் 'நீ ஒலு செய்தாயா?' என்று கேட்பதில்லை. ஆனால் மார்க்கத்தில் கடமையாக்கப்படாத ஒன்றை 'தொப்பி போட்டு தொழு இல்லையென்றால் பள்ளிவாசலுக்கு வராதே' என்பது மிகவும் தவறாகும்
 ஷியா கொள்கையை பின்பற்றும் முஸ்லிம்கள் முதல் மூன்று கலிபாக்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல மற்றும் அந்த மூன்று கலிபாக்களையும் குறைவாகவும் சொல்வார்கள் . அவர்கள் (ஷியா) பள்ளிவாசலுக்கு தொழுவதற்கு வர நம்மால் தடை செய்ய முடியாது .காரணம் அவர்கள் குர்ஆனையும்    நபியாக முகம்மது நபி (ஸ. அ ) அவர்களை  ஏற்றுக் கொண்டவர்கள் . இதனை ஹஜ் செய்பவர்கள் பார்க்கலாம் .( தடுப்பவர்களை நீதி மன்றமே தண்டிக்கும் நினைவில்  கொள்ளட்டும் ) இந்நிலை இருக்கும் போது நாம் நம்மில் சிலரை தடை செய்கிறோம்?

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்
. குர்ஆன்  - 2:45

 10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
-குர்ஆன்  - 2:114