Saturday 14 June 2014

விரும்பியதை சொல்லி விட்டேன்


விரும்பியதை சொல்ல வெட்கப் படுபவர்களுமுண்டு
விரும்பியதை சொன்னால் வெட்கக் கேடு என்று நினைப்பவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லாமல் போனதால்
விரும்பி நினைத்தது நடக்காமல் போனதே என்று வருந்துபவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லிக்காட்டுபவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லிச் செய்து முடிப்பவர்களுமுண்டு
விரும்பியதை சொல்லாமல் செய்து முடிப்பவர்களுமுண்டு

ஓடிக் கொண்டிருந்தவன் நின்றுதான் ஆக வேண்டும்
நின்றுக் கொண்டிருந்தவன் அமர்ந்துதான் ஆக வேண்டும்
அமர்ந்துக் கொண்டிருந்தவன் படுத்துதான் ஆக வேண்டும்
பிறந்தவன் இறந்துதான் ஆக வேண்டும்

தடையற்றதுமில்லை
தடம் புரண்டு போவதுமுண்டு
தடைக்கும் தடம் புரண்டு போவதற்கும் பயந்து
தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவன்
பிறப்பின் மகிமை அறியாதவன்
------------------------
என்ன சாதித்தாய் என்கிறார்கள்
இக்காலத்தில் இருப்பதை வைத்திருப்பதே சாதனைதான்
--------------------


லைக் போட்டால் லைக் விழுமாம்
காக்கா பிடித்தால் காரியம் ஆகுமாம்

லைக் பண்ணியதெல்லாம் கிடைக்கப் போவதில்லை
காக்காய் பிடித்து உண்ணப் போவதுமில்லை
--------------------
வாதம் செய்தவர்கலெல்லாம் வெற்றியடைவதில்லை
பிடிவாதம் செய்தவர்கலெல்லாம் சாதித்ததுமில்லை
-------------------
இன்று மின்சாரம் இருபது தடவைக்கு மேல் போய் வந்தது
சம்சராம் மின்சாரம் ஒளி இல்லாமையால் உப்பை சிறிது அதிகமாகவே சேர்த்து விட்டதானால் ஆனம் கைத்துப் போனது

ஒரு மாதம் முன்பு வாங்கிய அயோடின் கலந்த உப்பு கரையாமல் உள்ளது
வியர்வையால் தொண்டை கட்டியதால் சாதா உப்பை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க சிறிது தொண்டை தொந்தரவு குறைந்ததால்
உப்பை குறைத்துப் போடு என்று கத்தினேன் .

அம்மா உப்பு வாங்கி வாங்க என்றாள் .
அம்மா வீட்டில் உப்பு வாங்கி வாங்க என்று சொன்னதாக நினைத்து
உங்க அம்மா வீட்டில் எவ்வளவோ வாங்கி விட்டோம்
உப்பு கூடவா உங்க அம்மா வீட்டில் வாங்க வேண்டுமென்றேன்

1 comment:

  1. கருத்துள்ள மருமகன்...ஹா ஹா....

    ReplyDelete