Followers

Saturday, 3 January 2015

ஒதுங்கினால் ஒதுக்கி விடுவார்கள்


ஒதுங்கினால் 
ஒதுக்கி விடுவார்கள்
பிரபலம் ஆவதும் நம்மால்தான்
பிரபலங்கள் ஆவதும் நம்மால்தான்

பிரபலங்கள் ஓரிடத்தில் நிற்காது
பிரபலங்கள் ஓரிடத்தில் நின்றால்
பிரபலமாவது தடைப் படும்
பிரபலமாவதற்கு தடையை உடைக்க வேண்டும்
போரில் ஈடுபடுபவனுக்கு
போட்டியில் ஈடுபடுபவனுக்கும்
தாழ்மை உணர்வும்
இறக்க சிந்தனையும் இருப்பதில்லை

என்னால்தான் பிரபல்மானாய் என்றால்
என்னோடு சேர்ந்ததால்தான் பிரபலமானாய் என்பர்

உம் தகுதியும்
உம திறமையும்
உம்மை உயர்த்தி விடும்

ஓயாது உழைப்பும்
தொய்வில்லா மனமும்
தொடர் முயற்சியும்
தேடலைத் தரும்
ஒன்றை தேட தேடியதும் கிடக்கும்
தேடியதை விட உயர்வானதும் கிடைக்கும்

No comments:

Post a Comment