Wednesday, 21 January 2015

வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான்!


  மனிதனுக்கு வேண்டியது இருக்க இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள் ஆனால் திருமணம் செய்தால்தான் அவனது வாழ்வு முழுமையடையும்.
  
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. 

  இக்காலத்தில் வீடு கட்டுவது அனைத்தையும் விட மிகவும் கடுமையான செயலாக இருக்கின்றது. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான் அதிலும் திருமண ஆனவுடன் பெண்களுக்கு அதில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு வேண்டிய முதல்படியாக இருக்கவே இருக்கின்றது 'தலையணை மந்திரம்'. ஏன் அந்த நாட்டம் வந்தது! வெவ்வேறு இடத்திலிறுந்து வந்த மருமகள்கள் குணத்தில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்குள்  உள்ள ஒட்றுமை மற்ற பெண்களிடம் இருப்பது அபூர்வம். அதற்குத்தான் சிலரது வழக்கமாக இருப்பது மாமனார் வீட்டோடு மாப்பிள்ளைகள் குடியேறிவிடும் பண்பாடு.   இது கடற்கறையோரம் வாழும் மறைக்காயர்களிடம் உண்டு.
  வீடு கட்டவில்லையென்றால் வாடகை வீட்டிற்கு குடிபோய் விடும் நாட்டம் வரும். வீடு கட்டி முறையாக மற்றவர்கள் தவறாக பேசாதபடி  விரைவில் குடிபோய் விடலாம் என்ற உண்மையையோ அல்லது பொய்யையோ மனைவியை சமாதானம் செய்து சமாளிப்பவர்கள் ஏராளம்.
  சிங்கப்பூர் வாழும் சீனர்கள் படிக்க வைப்பதோடு சரி பின்பு அவரே வேலை தேடிக் கொள்ளவேண்டும். திருமணம்  ஆன   பின்பு தனிக் குடித்தனம் சென்று விடுவார்கள். வாரம் ஒரு முறை ஒன்று  கூடி ஓரிடத்தில் இருந்து மகிழ்வார்கள். அதனால் அவர்கள் அன்பு தொடர வாய்புகள் அதிகமாக உள்ளது.நாமும் அந்த முறையைக் கையாலாம்.

 தனி வீடு கட்டுவதை விடவருமானத்திற்கு தகுந்ததுபோல்  வாடகை வீட்டில் வாழ்வது பல வகையில் உகந்ததாக உள்ளது. அரசு கொடுக்கும் நூறு  நாட்கள் வேலைக்கு வேலை செய்பவர்கள் போய்விடுவதால்    வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் கொடுக்க வேண்டிய சம்பள பணம்  நம் வரவுக்கு தகுந்தது போல் இல்லை. நாமே சமைத்து சாப்பிட விறகு,கேஸ், மின்சார அடுப்பு உபயோகப் படுத்த மின்சாரமும் கிடைப்பதில்லை. இவையெல்லாம் சிறிது சிந்தித்தால் கூட்டுக் குடும்பம் நல்லது  என்ற  முடிவுக்கு வர வாய்ப்புண்டு.
இப்படியெல்லாம் சிந்தனை செய்தால் எப்படி முன்னேற்றம் அடைய முடியும் என்ற  மனைவியின் தாளாத ஆசையை நிறைவேற்றிவைக்க முடியும்!
வீடு கட்டும் முடிவுக்கு வருவதற்கு முன் அதற்கு தேவையான பணம் உள்ளதா என்பதனை யோசித்து நம் வீட்டின் திட்டத்திற்கு தகுந்ததுபோல் பணம் திரட்டவேண்டும். ஒரு காலமும் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டக் கூடாது. இது இருக்கும் நிம்மதியை (ஆண்களுக்கு) குறைத்துவிடும்.
வீடு கட்டுவதற்கு முன்பு கட்டப்போகும் வீட்டின் கட்டிட அமைப்பின்  நிழற்படம்  (ப்ளு பிரிண்ட்) தயாரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்பு நீங்கள் ஒவ்வொரு வீடாக பார்த்து அதில் உங்கள் திட்டத்திற்கு தகுந்ததுபோல் முடிவு செய்வதுடன் அந்த உங்களுக்கு பிடித்த வீட்டில் வசிப்பவர்களின் ஆலோசனையைக் கேட்பதனால் அவர்கள் அந்த வீட்டில் 'இந்த வகையான குறைகள் உள்ளது அதனை நாங்கள் குடிவந்து வாழும் போதுதான் அறிய முடிகின்றது. அது இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லது இது தேவையற்றது'
என்பார்கள். அதனை நீங்கள் உங்கள் திட்டத்தின் யோசனைக்கு கொண்டு வாருங்கள்.

  அடுத்து வீடு கட்டும் முன்பு தேவையான மணல் மற்றும் கம்பி பிற அடிப்படையான பொருட்களை சேமித்துக் கொள்ளுங்கள்.அதனால் நேரம் விரையமாவது குறையும் . வீடு மற்றவர் பார்க்க அழகாக இருக்க வேண்டும்  என்று நினைக்காமல் உங்களுக்கு தேவையானவைகள் (இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள்) அடங்கியதாகவும் மற்றும்  மகிழ்வைத் தரக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என திட்டமிடுங்கள்,

No comments:

Post a Comment