Sunday 25 January 2015

அறிந்தும் அறியாததுபோல் இருப்பது

டீ விற்பதும்
டீ குடிப்பதும்
புதிய செய்தி அல்ல

இமயமலை உச்சியிலும்
மலையாளி டீ விற்றுக் கொண்டிருப்பார்
வேடிக்கையாக மலையாளிகள் உலகம் முழுதும் இருப்பார்கள்
என்பதற்கு சொல்வதுண்டு

வியாபாரம் செய்ய
அதிலும் இரு நாடுகளுக்குள்
போர் உருவாக்கி ஆயுதம் விற்க
அமெரிக்கா எங்கும் வரும்
எவ்வகையாகவும் வரும்

அமெரிக்கா மற்ற நாடுகளை
ஆசை காட்டி வலையில் விழ வைப்பது
ஆரம்பத்திலிருந்து செய்து வருவதுதான்
அறிந்தும் அறியாததுபோல் இருப்பது
தானே மாட்டிக் கொள்ளும் நிலை

வரவே கூடாது என்று
விசா கொடுக்க மறுக்கப்பட்டவர்
சிகப்பு ஜமுக்காளம் விரித்து வரவேற்கப் பட்டார்
சிகப்பு ஜமுக்காளம் விரித்து வரவேற்கிறார்
சிகப்பு நிறம் எந்த அடையாளமும் குறிக்காமல் இருந்தால் நல்லதுதான்

நாட்டுக்கு நல்லது நடக்க
எந்த நிலையிலும் விரும்புவோம்
வாழ்த்துவோம்

No comments:

Post a Comment