Followers

Tuesday, 13 January 2015

ஒளி தரும் விளக்காய் அமைவது புரிந்துக் கொண்ட கல்வி

விவாதி
விளங்கச் செய்
கற்றுக் கொடு
விவரிப்பதை விடுத்து
அறியச் செய்

மடை திறந்த வெள்ளம் போல்
வார்த்தைகள் சொற்பொழிவுகளால் வரக் கூ டும்
திறந்து விடப்பட்டது பயன் பெற வேண்டும்
அருவிகளாய் நீர் கொட்டலாம்
அருவிகள் எவ் வகையில் பயன் பெற்றது என்பதே முக்கியம்

மார்க்க சட்டங்கள்
நாட்டின் சட்டங்கள்
நிறைந்து இருக்க
சட்டத்தின் நன்மைகளை கற்பிக்க வேண்டும்
சட்டத்தினை பேணுதல் இல்லாமல் போனவன்
சட்டத்தின் நன்மைகளை அறியாமல் போனவன்

அழுக்கை அகற்ற
துப்புரவு செய்ய
துடைப்பான் வேண்டும்
அவைகள் இருண்ட அறையில் இருந்தால்
ஒளி தரும் விளக்கு வேண்டும்
ஒளி தரும் விளக்காய் அமைவது
புரிந்துக் கொண்ட கல்வி

பாட நூல்கள் கிடைத்து விட்டன
பாடத்தை கற்பிப்பவர் யார்
கற்பித்தல் கல்வி பெறுதலுக்கு அவசியம்

கற்க
விவாதிக்க
விளக்கம் கிடைக்கின்றது
உண்மை உள்ளத்தில் பதிகின்றது
உண்மை அறிய
நன்மையை நாடி மனம் நிற்கின்றது

No comments:

Post a Comment