Monday, 12 August 2013

நல்வழி கிடைக்க முயற்சிக்க வேண்டும்.

இறைவனது இல்லத்தில் சிலர் தவறான வார்த்தைகள் பேச வழி விட்டு அதனை தடுக்க முடியாத உங்களுக்கு...

குத்பா நடத்தும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை உலமாவின் பிரசங்கம் நடைபெற்ற பின்பு பள்ளிவாசலுக்கு சிலர் வருகிறார்கள்.

சிலர் உலமாவின் பிரசங்கம் பிடிக்காமல் முஅல்லாவின் பள்ளியை விடுத்து வேறு பள்ளிக்கு செல்கின்றார்கள்.

அரசியல் மேடையாக மற்றும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனமாகவும் ,சொல்லக் கூடாத வார்த்தைகளை உயர்வான இறைவனது இல்லத்தில் பிரசங்கம் செய்வது தற்போது சில ஊர்களில் மாறி வருவது வருந்தத் தக்கதாக உள்ளது .

தொழுகை நடத்துவதற்கு முன் செய்யப்படும் பிரசங்கம் மார்க்க அறிவைத் தருவதோடு தொழுகையில் ஒன்ற வைக்கக் கூடியதாக அமைய வேண்டும் . குர்ஆன், நபிமொழி மற்றும் அதற்கான விளக்கங்கள் தந்தாலே போதுமானது . இவைகளில் காணக் கிடைப்பதே ஏராளம்.

தேவையான பள்ளிவாசல்கள் உண்டு தொழ மக்கள் வராமலிருப்பது பற்றி சிந்திப்பது

உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஊருக்கு ஒற்றுமை முக்கியம் என்பதை முன்னிறுத்தி முயற்சி செய்வது

அறிவு வளர்ந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டால் கண்டிக்காமல் அன்புக்கு முக்கியம் கொடுத்து நேசன் பாராட்டுவது

என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து செயல்பட்டு உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்ய முயற்சிக்க வேண்டாமா ?

இறைவனது அருள் அனைவருக்கும் கிடைக்க முயல்வோம் .

உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984

வசூல் செய்து விழா நடத்தும் நமக்கு

தேவையற்றவைகளுக்கு செலவு செய்யும் நமக்கு..

ஒதுங்கி நிற்கும் மக்களை உசுப்பி விடும் நமக்கு

பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் விரோதம் பாராட்டி உறவுகளை முறிக்கும் நமக்கு

வேலை வாய்ப்புகள் பற்றி ஒரு விழுப்புணர்ச்சி உண்டாக்குதல் பட்றி நினைக்காத நமக்கு

அரசு அறிவு கொடுத்தாலும் பயன்படுத்திக் கொள்ள முயசிக்காத நமக்கு

சரியான அரசியல் வழிகாட்டி இல்லாத நமக்கு

இறைவனது அருளை நாடி நல்வழி கிடைக்க முயற்சிக்க வேண்டும்

No comments:

Post a Comment