நம் திருமணம் இறைவனால் நிச்சயிக்கப் பட்டதாம்
நீ ஒரு பக்கமிருக்க நான் ஒருபக்கமிருந்தோம்
நீயும் நானும் ஒன்றிணைய நாம் காரணமில்லை
நீயும் நானும் ஒன்றிணைந்து விட்டோம் திருமண உறவில்
நீயும் நானும் ஒன்றிணைந்து உறவு மேன்பட்டது
உன் கருத்தும் என் கருத்தும் உடன்படவில்லை
உன் சுவையும் என் சுவையும் மாறுபட்டது
நான் உலகத்தில் உலா வர விரும்புவேன்
நீ இல்லமே உலகமென்பதில் நிறைவு கொள்கிறாய்
நான் காரமான உணவை விரும்புவேன்
நீ இனிப்பான உணவை விரும்புவாய்
இத்தனை மாறுபாடுகள் நம்முள் இருக்க
இரவு நேரம் வர படுக்கையில் நாம் காந்தமாக ஒட்டிக் கொள்கிறோம்
இனிய படிக்கையில் ஒட்டிக் கொண்டதால் நமக்குள் நேசம் உருவாகிறது
இனிய நேசத்தின் விளைவால் நம்மை இணைக்க நமக்கோர் குழந்தை
வாரிசின் உறவால் நமக்குள் ஒரு பிணைப்பை இறைவன் தந்தான்
வாரிசாக வந்த குழந்தையை கொஞ்சுவதில் நமக்குள் வேறுபாடில்லை
உறவின் மகிமையைக் குறைக்க ஒளிந்து நின்ற
உப்பு சப்பான காரண காரியங்கள் ஓடி மறைந்தன
உறவின் பிடிப்பு மேன்பட்டது ஓடி விளையாடும் நம் குழந்தையைக் காண
'குழல் இனிது, யாழ் இனிது' என்ப, தம் மக்கள். மழலைச் சொல் கேளா தவர்.' - திருக்குறள்
நான் காரமான உணவை விரும்புவேன்...?!!!!!?
ReplyDeleteசிறந்த படைப்பு
ReplyDeleteரசித்து வாசித்தேன் !
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு காரம் சாப்பிட்டு அதனை செரிக்க வயிறு சரியாகி செரிக்க இனிப்பும் இறுதியாக சேர்த்துக் கொண்டால் உடல் உறுதியாகி மனமும் மகிழ்வடையும் .
ReplyDeleteநன்றி உங்கள் வருகைக்கு
சமூக விழிப்புணர்வு பக்கங்கள் வருகைக்கும்
ReplyDeleteகருத்துரைக்கும் மிக்க நன்றி