Wednesday, 21 August 2013

தவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்

உயிரற்ற ஊர்தியால் உயிரோடு உள்ள ஒருவர் மோதிச் சென்றதால்
உயிரோடு போராடிக் கொண்டிருந்தது ஓர் உடல்

உயிரோடு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்தவர் பலர்
உயிரோடு பார்த்தவர் பார்த்தும் பாராமல் போனார்

உதவ உள்ளம் இருக்க
உதவ முற்பட உயிர் பிரிந்தால்
உதவியதால் தொல்லைகள் வரும்
தொடர்ந்து நீதிமன்றம் வரச் சொல்லி தொல்லை கொடுப்பார்
தொடரும் என் பயணம் தடைபடும் நீதி மன்றத்தால்
தாமதமாகும் தீர்ப்புக்கு தொடர் பயணம் தொல்லை தரும்
தாமதமாகும் தீர்ப்பில் நீதி மறுக்கப்படும்
"Justice delayed is justice denied" is a legal maxim
தவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்

உயிரற்ற உடம்பு கிடத்தப்பட்டது
உயிருள்ள உறவு கலங்கியது

கிடத்தப்பட்ட காலம் கடக்காமல் புதைக்கப்பட்டது
கலங்கிய காலம் கடந்து போனது

காலம் கடந்தும் புதைக்கப் படாமல் விட்டால் நாற்றம் பரப்பும்
காலம் கடந்தும் புதைக்கப் பட்டவர் விட்டுச் சென்ற அறிவு மணம் பரப்பும்

4 comments:

  1. Amazing you are a great writer .

    You words are powerful and bold.

    Hoping to read more!

    Thank you for promoting goodness in this dark world of sins.

    ReplyDelete
  2. "உயிரற்ற ஊர்தியால் உயிரோடு உள்ள ஒருவர் மோதிச் சென்றதால்
    உயிரோடு போராடிக் கொண்டிருந்தது ஓர் உடல்"
    விபத்தைப்பற்றி அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.ஓட்டுனர்கள் கவனிக்க வேண்டிய வரிகள்

    ReplyDelete
  3. Thank you very much for your visiting this blog and commenting.
    Mr Nikhil, your comment is encouraging me

    ReplyDelete
  4. அன்பு நண்பர் Viya Pathy அவர்களுக்கு ,தங்கள் வருகை மற்றும் கருத்துரை என்னை மகிழ்விகின்றது .நன்றி நண்பரே

    ReplyDelete