Wednesday 14 August 2013

நம்பிக்கையும் சுதந்திரமும்

உன் போக்குக்கு விட்டால் நீ கெட்டு விடுவாய் – அப்பா

உன் போக்குக்கு விட்டால் நீ அனைத்தையும் அழித்து விடுவாய். நீ ஒரு எல்லைக்குள் தான் மேய வேண்டும் அதனால் ஒரு நீண்ட கயிறு போட்டு ஒரு மரத்தில் கட்டி விடுகிறேன். எல்லையை மீறினால் உன்னை அந்த கயிறு கட்டுபடுத்தும் – மாட்டுக்கு உரிமையாளர்

சட்டம் ஒன்று உள்ளது அதன்படிதான் நீ செயல்பட வேண்டும். மீறினால் உன் தவறுக்கு தகுந்ததுபோல் உனக்கு தண்டனை கிடைக்கும். சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிப்பதற்கு உனக்கு உரிமை கிடையாது – அரசு வகுத்த சட்டம்

சுதந்த்திரமாக பிறந்து விட்டாய் ஆனால் உன்னை சட்டம் என்ற பூ விளங்கு கட்டிப் போட்டுள்ளது உன் நன்மைக்காகவே
- சட்டம் சொல்வது

உனக்கு ஒரு வேதம் தந்துள்ளேன் அதன்படி நடந்துக் கொள். தெரிந்தும் தவறு செய்தால் உனக்கு சுவனமில்லை- வேதம் சொல்வது

எத்தனை சட்டம் போட்டாலும் எனது திறமையால் தவறு செய்து தப்பித்துக் கொண்டு சுதந்திரமாக் திரும்பவும் தவறு செய்வேன்
– கேடு கெட்ட மனிதன்

மனசாட்சி என்று ஒன்று இருக்க தன் தவறு அறிந்து அவனே தன் சுதந்திரத்திற்கு ஒரு கட்டுப்பாடு அமைத்துக் கொள்வான். அது அவனையும் மற்றவரையும் கட்டுப்பாடான வாழ்வை தர வைத்து அனைவரும் மகிழ்வோடு வாழ முடியும். அதுதான் மார்க்கம் தந்த வழி.

No comments:

Post a Comment