Thursday, 22 August 2013

சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்

சொல்லுக்கு சில பொருள்கள்
சொல்லாமைக்கு மௌனம்
சொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்
சொல்லக் கூடாததை சொல்லாமல் தவிர்க்க வேண்டும்

மௌனத்திற்கு பல பொருள்கள்
மௌனம் வர வேதாந்தியாகலாம்
மௌனம் வர தனிமைப் படுத்தப் படலாம்
மௌனம் தன்னையறிதலின் வழியாக அமையலாம்
மௌனம் சம்மதத்தின் ஒப்புதலாகலாம்
மௌனம் வேண்டாமையின் தோற்றமாகலாம்
மௌனம் தேவைக்கு தகுந்த நன்மையும் பயக்கும்
மௌனம் வர நண்பனை இழக்கும் நிலையாகலாம்

பாவமான நிகழ்வு
பாசமான நண்பனை
பரிதவிக்க வைத்த
பிரியமான நண்பனின் செயல்பாடு
பிரியமான நண்பனிடம் பிரியத்தை வெளிப்படுத்தாதின் விளைவு

 நாகூர் சலீமின் பாடலை 74 வயதான சரளா பாடுகிறார். அவர் குரலில் இன்னும் இனிமையும் இளமையும் ஜொலிக்கிறது, ஒலிக்கிறது.

1 comment:

  1. நல்லதைச் சொல்... அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete