Monday, 2 December 2013

போராட்டமே வாழ்வாகிவிட்டது


அவர்கள் தங்கள் உயிருக்காக போராடுகிறார்கள்
அவர்கள் மற்றவர்கள் உயிருக்காக போராடுகிறார்கள்
அவர்கள் மற்றவர்கள் நலத்திற்க்காக போராடினார்கள்
அவர்கள் போருக்கு தாங்களே விரும்பி சென்றார்கள்
அவர்கள் போருக்கு கட்டாயத்தின் காரணமாக சென்றார்கள்
அவர்கள் போருக்கே போகாமல் கட்டாயமாக காரணமின்றி அடைக்கப் பட்டார்கள்

அவர்கள் மனைவியர்கள் மனதுக்குள் போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் நலமே திரும்ப வேண்டுமென்று போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று போராடுகிறார்கள்
அவர்கள் மனைவியர்கள் தங்கள் கணவன் தங்களிடம் வரவேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றார்கள்


விவசாயத்திற்காக போராட்டம்
விலையேற்றத்திற்க்காக போராட்டம்
மின்சாரத்திற்க்காக போராட்டம்
விடிவிக்கப் போராட்டம்

போராடத்திலேயே காலம் கடக்கிறது
போராட்டத்திற்கு விடிவுமில்லை
போராட்டத்திற்கு ஓய்வுமில்லை
போராட்டமே வாழ்வாகிவிட்டது

1 comment:

  1. இன்றைய நிலை அப்படித்தான் உள்ளது...

    ReplyDelete