Wednesday 18 December 2013

சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன

அலைகளில் மாட்டித் தடுமாறி தப்பிக்க முயல்வது போல்
அரசியல் சட்டத்தில் மாட்டிக் கொண்டவர் தப்பிக்க முயல்கின்றனர்
அரசியல் சட்டம் அறியாது பிழை புரிந்தவர்
அரசியல் சட்டம் அறியாதது பிழையென பிடி வாரண்டில் பிடிக்கப் படுகின்றனர்
அரசியல் சட்டம் அறிந்தும் பிழை செய்தவர் சட்டத்தின் ஓட்டையை பிடித்து விடுகின்றனர்
அரசியல் அறிவு அற்றோரும் அரசாட்சியில் நுழைந்து விடுகின்றனர்
அரசியல் அறிவு வேண்டாம் அனுபவ அறிவு போதுமென்கின்றனர்


ஒரு நாளைக்கு ஒரு அரசியல் விதி உயர்த்தப் படுகின்றது
ஒரு நாளைக்கு ஓராயிரம் அரசியல் சட்டம் மீறப் படுகின்றன
ஒரு நூற்றாண்டு ஓடி மறைந்தாலும் இந்நிலை நீடிக்கும்
ஒரே வழி உயர்வாய் வாழ மன வழியில் நேர்மை நிலைத்து விட்டால்
ஒவ்வொரு மார்க்கமும் உயர்வான வழியையே காட்டிச் சென்றன
ஒவ்வொரு மார்க்கத்தையும் பின்பற்றுவோரிலும் பிழை புரிவோர் மலிந்து விட்டனர்
ஒரு மார்க்கத்தை பின்பற்றுவோன் அடுத்த மார்க்கத்தை பின்பற்றுவோனை வெட்டி விளையாடுகின்றான்
சட்டமும் , விதியும் , மார்க்கமும் நகைத்து நிற்கின்றன

No comments:

Post a Comment