Monday, 23 December 2013

தவிக்கிறேன் தனிமைப் பட்டதாய்...

தாளாத பாசத்தில் தாய் வீடு போனாய்
தாளாத துயரத்தில் நான் படும் பாடு நீ அறிவாயோ!
பகற்பொழுதும் கனலாய் சுடுகிறது
பனிக் கொட்டும் இராக்காலமும் அனலாய் சுடுகிறது
படிந்துள்ள தூசியை துடைத்து வைப்பாய்
படிந்துள்ள தூசி நாசியை நெருடுகிறது
உன் நினைவில் என் இமைகள் மூடுமோ!

நீ இல்லாத இராக்காலம் கனாவாய் கழிகிறது
நீ இல்லாத இருளில் சுருண்டு கிடக்கிறேன்
நீ கிளப்பிய வேகத்தை
நீ திரும்புவதிலும் வேகத்தைக் காட்டு
நீ இல்லாது மனமும் வெறுச்சோடி போனது
நீ இல்லாத இல்லமும் வெறுச்சோடி போனது
நீ இருக்கும் நேரத்தில்
பசுமையாய் சோலையாய் மனதில் நிற்பாய்
நீ இல்லாத நேரத்தில்
பசுமையற்ற பாலையாய் மனதை வாட்டுகிறாய்

பறவைகலும் மாலை நேரத்தில் கூடு திரும்பும்
பணி செய்யும் பாவையாய் வீடு திரும்பு

1 comment: