உயரத்திற்கு ஏற ஏணி வேண்டும்
உயரத்திலிருந்து இறங்கவும் ஏணி வேண்டும்
உயரம் போனவர் உயரத்திலேயே இருப்பதில்லை
உயர உயரப் போனாலும் கீழே வந்தாக வேண்டும்
உயர்த்தி விட்டவர் உன்னைத் தாங்கிப் பிடித்தல் வேண்டும்
உயர்த்தி விட்டவர் உன்னை உதறி விட்டால் விழுந்து மடிவாய்
உயர்ந்த உறவை நாடி நிற்க உயர்வைப் பெறுவாய் .
உயர்வாக உனக்கு கொடுக்கப் பட்டது உனக்கு மட்டுமல்ல
உயர்வாக உனக்கு கொடுக்கப் பட்டது
உன்னை உயர்வாக்கியவர்களுக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டதே
- முஹம்மது அலி ஜின்னா.
------------------------------------------------------------------------------------------------
மழையின் பல துளிகள் பெருவெள்ளம் !
சோற்றின் சில பருக்கைகள் ஒரு கவளம்!
மிச்சம் வைத்தால்தான் வருகிறது
சிலருக்கு அந்தஸ்தின் உச்சம் !
அந்த மிச்சத்தை வழிப்பதில்தான் இருக்கிறது
இன்னும் சிலரது வாழ்கையின் மிச்சம் !
வயிறு பசிக்காதவர்கள்
வீசி எறியும்
எச்சில் சோறுகளை குவித்து வைத்தால்
இமயத்தின் உயரம் குறையும்...
- அபூஹாஷிமாவாவர்
It's wrong to discard a ladder that helped one to reach the higher rungs.
ReplyDeleteNice, inspiring write.
உயர்வான வரிகளும் உண்மையான வரிகளும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
@ Arumugam Easwar
ReplyDeleteThank you for your encouraging comment