Wednesday, 5 June 2013

ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போடணும் !

அண்ணே! நீங்கள் தானே ஜப்பார்

நான் வெறும் ஜப்பார் அல்ல. அரசகுளம் ஜப்பார்

சரிண்ணே . உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கணும்

முதல்ல சலாம் சொல்

சலாம்ணே

அதை முசுசா சொல்ல கத்துக்க

அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே

ஏதோ சொல்கிறார் ...

பதில் சொல்லுங்க அண்ணே

என்னய்யா பதில் சொல்ல

சலாத்துக்கு பதில்

அதை ஒலி பெருக்கி வைத்தா சொல்ல முடியும் . எனக்கு வேலை இருக்கு வந்த வேலையை சொல்
அப்படி என்ன வேலை!

ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போடணும்

ஆமாங்க நீங்க பெரிய கேள்வியெல்லாம் கேட்பதாய் சொல்றாங்க !

(மகிழ்ச்சி பொங்க) டீ குடிக்கிறியா !

வேணாம்னே .நேரமாச்சு . உங்களைப் பற்றி எல்லோரும் 'நீங்க மனைவி பேச்சை கேட்கிறவங்கன்னு சொல்றாங்களே '

(கோபமாக) பொண்டாட்டி பேச்சை கேட்க்காமே பின்ன யார் பேச்சை கேட்கிறது ? சொல்றவனும் அதான் செய்றான். மனைவிதான் என்னோடு கட்டில்லே படுத்துக்கிறாங்க ,சாப்பாடு ஆக்கி போடறாங்க

சரிண்ணே ! நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறப்ப யாரோடு படுத்துக்கிறீங்க யார் சாப்பாடு ஆக்கி போடறாங்க!
தேவையில்லாமல் அனாவசிய கேள்வி கேட்கிறே! உன்னை முதலில் ஃபேஸ்புக்கில் பிரன்ட்ஷிப்பிலிருந்து நீக்கணும். போயிட்டு வா

அப்படில்லாம் சொல்லாதீங்கண்ணே
------------------
வந்து வீடு சேருவதற்குள் ஒரு வக்கீல் நோட்டிஸ் வந்தது
--------------------
'உன்னை யாருன்னு எனக்குத் தெரியாது .உன்னை பார்த்ததே இல்லே .என்னை பேட்டி கண்டதுபோல் ஃபேஸ்புக்கில் போட்டுள்ளாய். உடனே அதனை நீக்கணும் .மன்னிப்பு கேட்கணும் .இல்லையென்றால் ஒரு கோடி ரூபாய்க்கு மனஅளவில் பாதிக்கப் பட்டதாக மானநஷ்ட வழக்கு போடுவேன்' என்று
---------------------------------------------------------------
(பின் குறிப்பு )ஜப்பார் அண்ணன் மிகவும் நல்லவர் . கற்பனையாக ஒரு நேர்காணல். அதனால் வழக்கு தொடரமாட்டார்

2 comments:

  1. ஹா... ஹா... ஜப்பார் அண்ணன் அவர்கள் கோபித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி...

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே .
    ஜப்பார் அண்ணன் அவர்கள் எனது நெருங்கிய நண்பர் .மிகவும் ரசிக்கும் குணம் உள்ளவர் .அவரே ஃபேஸ்புக்கில் ரசித்து லைக் போட்டுள்ளார்

    ReplyDelete