Monday 10 June 2013

யார் அந்த வீரன் !

உன் தந்தை சொல் கேட்டு மதி கெட்டேன்
உன் தந்தைக்கு உணர்ச்சி கொப்பளிக்கும்
உன் தந்தைக்கு உணர்ச்சியை அடக்கும் மனமில்லை
உன் தந்தைக்கு செயல் வேண்டும்
உன் தந்தைக்கு செயலின் விளைவின் அருமை விளங்கவில்லை
உன் தந்தை சொல் கேட்டு அத்தனை தடை போட்டேன் நீ வராமலிருக்க
நம் இறைவன் அத்தனை தடையும் உனக்கு எளிதாக்கி உடைக்க வழி செய்தான்
உன் ஆற்றலால் உட்புகுந்தாய்
உட் புகுந்த உனை உயிராக உருவாக்கினேன்
உன் நேரம் வந்து உலகில் உயர்வாக  உயிர் பெற்றாய்
உனைக் கண்டு உளம் மகிழ்ந்து உயர்வாய் உனைப் போற்றுகிறார்
வேண்டாம் என்றவனை விரும்பி விரும்பி கொஞ்சுகின்றார் உன் தந்தை
வீரனாய் உட்புகுந்து வீரனாய் வெளிவந்து விரும்பியனாய் வந்தவன் நீ
எல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்!
நீ தானடா உண்மையான வீரன் என் அருட் செல்வமே !

 -------------------------------------------------------------------------------------------
தமிழில் தர்ஜமதுல் குர்ஆனை முதன் முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ,சிராஜுல் மில்லத் ஆ.கா.அ . அப்துஸ் சமது அவர்களின் தந்தை ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி. அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப் பற்றி தங்களது கருத்து என்ன என்று கேட்டாராம். அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் "இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம்" . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும் இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

4 comments:

  1. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே

    ReplyDelete
  3. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. @சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
    கருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள்

    ReplyDelete