Friday, 7 June 2013

பணம்! பணம்! பணம்?


பணம் வாழ்வில் வசதியை உருவாக்க உதவும்
பணம் மட்டும் வாழ்வில் மகிழ்வைத் தராது
Money can't buy happiness, but it can make you awfully comfortable

விருப்பப்பட்டு வாகனம் வாங்கி
வாங்கிய வாகனத்தை விரைவாக செலுத்தி
விரைவாக செலுத்தியமையால் தடுக்கி வீழ்ந்து
வீழ்ந்த இடத்தில சிதறிய சில்லறைகளை பொருக்கினேன்
பணம் பொருக்கும் மனதை வளர்த்து பொறுக்கியாக்கியது



பசியால் நான் துடிக்க
ருசி பார்த்து இனிப்பை திண்கிறாய்

எனக்கு இருக்க இடமில்லை
உனக்கு இருக்குமிடம் வசதியில்லை

எனக்கு மனம் பார்த்து மணமுடிக்க விருப்பம்
உனக்கு பணம் பார்த்து மணமுடிக்க விருப்பம்

நமக்குள் ஜாதியும் பிரித்தது
நமக்குள் பணமும் பிரித்தது

நீ பிரித்ததை ஒன்று சேர்க்கும் பணமென்கிறாய்
நான் பிரிப்பதை தடுத்து நிறுத்தும் மனமென்கிறேன் 

'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே'
இது வேதனையால் வந்த தத்துவம்

"பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது".
-ஸ்மித்.

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. "
இது அறிவின் ஆற்றல்

நாம் இறந்த பின்பு நம்மோடு தொடர்வது அருளும், நன்மையும்தான்
இது உண்மையின் முடிவு .

4 comments:

  1. இது தான் சரியான முடிவு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Beautiful write. Money has such power.

    ReplyDelete
  3. கருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே

    ReplyDelete
  4. Thank you very much for your visit and for your comment Mr,Arumugam Easwar

    ReplyDelete