சொன்னவர் செயல் படுத்தினாரா!
சொல்வது எளிது .செயல்படுத்துவது கடினம் .
யார் சொன்னார் ? ஏன் சொன்னார் !
சொன்னவர் செயல் படுத்தினாரா! என்று ஆய்வு செய்வதை தவிர்த்து சொல்வது உயர்வாக இருப்பின் அதனை மனதில் இருத்திக் கொள்வது சிறப்பு தரலாம். சொன்னவர் சொன்னபடி செய்யவில்லை என்பதை நினைத்து நாம் ஒதுக்க ஆரம்பித்தால் ஒன்றுமே நமக்கு கிடைத்திருக்காது. உயர்ந்த கருத்துகளை சொன்னவர் சொல்லியபடி செய்திருந்தால் அவர் உயர்ந்த நிலைக்கு உரியவராகி விட்டார்.
இறைவன் சிலருக்கு அறிவைத் தந்திருக்கலாம் .அவர் அதனை மற்றவருக்கு பகிர்ந்திருப்பார்.அதனை நாம் பெற்றுக் கொள்வோம்.பகிர்ந்தவர் அதன்படி நடந்தாரா என்ற சிந்தனை பகிர்ந்த உயர்ந்த பொருளை இழக்க நேரிடும் . வீரத்தைப் பாடியவர் கோழையாகவும் இருக்கலாம் . காதலைப் பற்றி கவிதைப் பாடியவர் காதலித்துத்தான் பாட வேண்டும் என்று நினைப்பது முறையாகிவிடாது.
உற்பத்தி செய்பவர் ஒருவர் ,விற்பவர் ஒருவர் ,வாங்குபவர் ஒருவர், பயனடைபவர் ஒருவர் .இது யதார்த்தம். கருவைக் கண்டு பெறுவதைக் பெற்று பயனடைதலும் சிறப்புதான்.
அந்த சிறப்பை அடைய பரந்த மனம், பக்குவப்பட்ட மனமும் வேண்டும்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்... நன்றி...
Nice read. Agree with you
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி .வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன் அவர்களே
ReplyDeleteThank you very much for your comment Mr.Arumugam Easwar
ReplyDelete