Monday 19 August 2013

இறையோனது பார்வையில் உயர்த்தப் பட்டாய்

அயராத நெஞ்ஜோடு நிமிர்ந்து உலா வந்தாய்
அயர்ந்து நெஞ்சில் ஓடிய உயிர்க் காற்றை நிறுத்தி விட்டாய்

கலையாக சொல்லியதை நிலையாக செய்து வந்தாய்
நிலையாக நின்று தொழுததை இறைவன் பெய்த அருளானது

இறைதாசனாக உனை உருவாக்கிக் கொண்டாய்
இறையோனது பார்வையில் உயர்த்தப் பட்டாய்

உனை நினைத்து உருகாத மனமும் உருகும்
உனை நினைத்து உணராத உடலும் உணரும்

அலையோடிய நெஞ்சினிலே உன் நினைவால்
அலையாக நெஞ்சுருக மக்கள் வெள்ளம் உனை வாழ்த்தும்

உஹுது மலைபோல் உன் நன்மை உன்னுடன் வரும்
சஹீது ஆனதால் உன் உடன் உயர்ந்தோர் இருப்பார்

-----------------------------------------------------------------------------------------------------------------

நடுநிலையோடு செயல்படும் தொலைக்காட்சி தேவை

நடுநிலையோடு செயல்படும் தொலைக்காட்சியும் மற்ற மீடியாக்களும் உருவாக நாம் முயற்சி செய்ய வேண்டும்.

இதுவரை கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ மருத்துவர் என்ற பல துறைகளிலும் புகழ் பெற்ற மக்களுக்கு சேவை செய்த பெரியார் தாசன் என்ற Dr. அப்துல்லாஹ் அவர்கள் இறைவன் நாட்டப்படி இறந்த செய்தியை எந்ததொலைகாட்சிகளும் , மற்ற மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையானது .
------------------------------------------------------------------------------------

 ஜனாஸா தொழுகை காலை 9 மணிக்கு ;
++++++++++++++++++++++++++++++++++

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவரது ஜனாஸா தொழுகை இன்று (20.08.2013) காலை 9 மணிக்கு சென்னை மக்கா மஸ்ஜிதில் வைத்து நடைபெறுகிறது நடைபெறுகிறது.

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ மருத்துவர் என்ற பல துறைகளிலும் புகழ் பெற்ற மக்களுக்கு சேவை செய்த பெரியார் தாசன் என்ற Dr. அப்துல்லாஹ் அவர்கள் இறைவன் நாட்டப்படி இறந்த செய்தி அனைவருக்கும் ஆற்ற முடியாத துயரத்தை தந்தாலும் அனைத்தும் இறைவன் நாடப்படிதான் நடக்கும் என்ற மனதோடு நாம் நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக என்று அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக.....
.யா அல்லாஹ்...!
அப்துல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வாயாக,
அவர்களின் பாவத்தை மன்னித்து,கபுருடைய வேதனையை நீக்குவாயாக,,,!
அவர்களுக்கு சொர்கத்தில் மிக உயர்ந்த இடத்தை கொடுப்பாயாக,

'நான் அறிந்த இஸ்லாம் ' - பெரியார்தாசன்

3 comments:

  1. உனை நினைத்து உருகாத மனமும் உருகும்
    உனை நினைத்து உணராத உடலும் உணரும்//
    அய்யாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.பிரிவால் வாழும் குடும்பத்தாருக்கு ஆறுதல்கள்

    ReplyDelete
  2. அன்பு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களது ஆறுதல்கள் உயர்வானவை .
    உங்கள் வருகைக்கும் ,கருத்துரைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete