Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Saturday, 9 May 2015

அம்மா !அம்மா !


அம்மா !
நீ இறக்கவில்லை
நீ இருக்கிறாய்
நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய்
நீ இன்றேல் நான் ஏது !

என்னைப் பெற்று மகிழவே
உன்னை உன் அம்மா பெற்றால்
என்னைப் பெறவே

உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான்
உன்னை தோற்று வைத்தவன்
உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்

என்னை சில காலங்கள்
இவ்வுலகில் உலவ விட்டு
என்னையும் உன்னைப்போல்
தன வசமாக்கிக் கொண்டு
உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்

உன்னை இறைவன் முதலில் தன் வமாக்கிக் கொண்டது
என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்

முற்றிலும் அறிந்த அவன்
முறையாகவே செயல்படுவான்

உனக்காக இறைவனை நான் வேண்ட
இறைவன் நமக்கு கொடுத்த் அருள்தான்
அவன் அருட்பெரும் கருணையுடையோன்

 Mohamed Ali

Monday, 15 September 2014

உன் படம் வேண்டாம்

உன் படம் வேண்டாம்
நீயே என் உள்ளத்தில் பதிந்து விட்டாய்

உனது கனிந்த கரங்களால் அணைத்துக் கொள்
உனது மென்மையான் உதடுகளால் கன்னத்தில் முத்தங்கள் கொடு
உனது உள்ளங் கைகளால் தலையில் தடவிக் கொடு
உனது மனதின் இசையால் உறங்கச் செய்து விடு

நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லி விடு
நான் உன்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்

உனது அளவற்ற வாழ்த்துகள்
எனக்கு சிறப்பான வாழ்வைத் தரும்

உலகத்தில் பெற்ற அழகுகள் அனைத்தும்
உன்னால் நான் பெறப் பட்டவைகளே

அம்மா அணைத்துக் கொள்
அம்மா உன் அரவணைப்பில்
நான் உறங்க விரும்புகின்றேன்

அம்மா உன் மடியிலேயே சுவனம் உள்ளது
அம்மா உன் மடியிலேயே சுவனத்தின் சொத்துக்கள் நிறைந்துள்ளன

அம்மாவின் நினைவில் அவர்களுக்காக
அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டாத நாட்களில்லை

அம்மா மனதிலேயே உறைந்துவிட்டதால்
அம்மாவை மறந்தாலல்லவா
அம்மாவை நினைப்பதற்கு 

Saturday, 10 May 2014

அடுப்பங்கரை வேலை அவளுக்கு அலுப்பைத் தரவில்லை

ஓயாத வேலை
ஓய்வே இல்லை

ஒன்பது பேரைப் பெற்றாள்
ஒன்பது பேரும் உட்கார்ந்து உண்ண

அடுப்பங்கரை வேலை
அவளுக்கு அலுப்பைத் தரவில்லை
அவள் பெற்ற பிள்ளைகளுக்கும்
அவள் பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போட

அவள் பெற்ற பிள்ளைகளின் மகிழ்வே
அவளது மகிழ்வாய் இருந்தது

Friday, 4 April 2014

அவனுக்கென்ன அவ்வளவு அவசரம் !

மெழுகுவத்தியாய் வெளிச்சம் தந்தாய்
உன்னை வதைத்து என்னை வளர்த்தாய்
பாசத்தைக் காட்டினாய் எதையும் எதிர்பாராமல்
பாசம் உன்னோடு உருவாகியது என்னை உருவாக்கியதிலிருந்து
கண்டிக்கும் மனதிலும் கனிவு உன்னோடு ஒன்றி இருக்கும்
முறைத்துப் பார்ப்பாய் சிரித்துத் தழுவுவேன்

Thursday, 27 March 2014

அம்மா இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியவில்லை!

அம்மா இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியவில்லை
அம்மாவான பின் அம்மாவின் அருமை தெரிகின்றது

பிள்ளையாக இருக்கும் போது அம்மாவுக்கு கொடுத்த தொல்லைகள் தெரியவில்லை

அம்மாவான பின் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லைகள்
அம்மாவுக்கு நான் கொடுத்த தொல்லைகள் தெரிகின்றது

அம்மா இருக்கும்போது அம்மாவைப் பற்றி ஒரு வரியும் எழுதவில்லை
அம்மா இறந்த பின் அம்மாவைப் பற்றி யார் எழுதினாலும்
அம்மாவின் நினைவு மனதில் வரிகளாக பதிகின்றன

Wednesday, 5 March 2014

அம்மா பெருமையாக சொல்லவில்லை

அம்மா அனைத்தும் கொடுத்தாள்
அம்மா கொடுத்தததை
அம்மா பெருமையாக சொல்லவில்லை

அப்பா சிலவற்றை செய்து கொடுத்தார்
அப்பா அதனை பெருமையாக பேசுவார்
அப்பா பெருமையாகப் பேசுவது
அம்மாவுக்கு பிடிக்காது
'உங்க கடமையை செய்தீர்கள் அதனை பெருமையாக பேசுவதற்கு என்ன இருக்கிறது'
என்று அம்மா கோபமாக கடிந்து பேசுவாள்

Thursday, 6 February 2014

அம்மாவின் பாச கண்டிப்பு

அம்மாவின் பாச கண்டிப்பு

பார்த்து போ
பார்த்து வா

கணடவனிடம் சேராதே
கண்டவனிடம் பேசாதே

கவனமாய் இரு
கவனமாய் படி

கண்டிப்பாய் வளர்த்தாள் அம்மா
கவனமாய் வளர்ந்தேன் அம்மா சொற்படி

சிறு வயதில் ஒரு தீங்கும் வரவில்லை
சிறு வயதில் ஒரு ஆபத்தும் வரவில்லை
சிறு வயதில் அம்மா பார்த்து வளர்த்ததால்
சிறு வயதில் அம்மா பொத்தி பொத்தி வளர்த்ததால்

Wednesday, 25 September 2013

மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது!


 அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம். நான் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் எனக்கு ஆனந்தன் என்ற பெயர் எனக்கு வைத்திருப்பாளோ!

  நான் குழந்தையாக இருக்கும்போதே எனது அப்பா இறந்து விட்டதால் அப்பா வைத்திருந்த பொட்டிக் கடையை தானே தொடர்ந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து என்னை படிக்க வைத்தாள். பாவம் அம்மாவுக்கு ஒரு கண்தான்,  மற்றொரு கண் இருக்குமிடம் பள்ளமாக  இருக்கும்.  ஒரு கண் பார்வையோடு வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு கடையையும் கவணித்துக் கொள்வாள் . 

 சிறிய வருமானத்தைக் கொண்டு அரசாங்க உதவிப் பணமும் பெற்று பொறியாளர் படிப்பு வரை என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தாள். என் சிறுவயதில் அம்மாவின் அழகான முகத்தில் எனக்கு குறை தெரியவில்லை. ஒற்றைக் கண்ணுடன் இருப்பதால் அம்மாவின் முகம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்ற  மனம் எனக்கு வந்தது உடன் படிக்கும் மாணவர்கள்  ' உங்க அம்மாவுக்கு ஒரு கண் பார்வைதானே! ' என்று கேட்டதிலிருந்து.  கல்லூரிக்கு அம்மாவை என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி விட்டதிலிருந்து அவள் என்னைப் பார்க்க கல்லூரிக்கு வருவதில்லை.

Wednesday, 24 July 2013

அம்மா! நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்

அம்மா உனை நினையாத நாள் உண்டோ !
அம்மா உனக்காக வேண்டாத நாள் உண்டோ!
அம்மா நீ இல்லாமல் நான் ஏது ?
அம்மா நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்
அம்மா நான் பாசம் அறிய வைத்தவள் நீ தானே
அம்மா நான் தவறு செய்தாலும் அன்போடு அறிய வைத்து திருத்தியவள் நீ தானே
அம்மா உன் மடியில் சுவனம் உள்ளது யென நாயகம் சொல்லியதை உணர்வால் அறிந்தேன்
அம்மா நீ இறைவன் அருளால் சுவனம் சென்று விட்டாய்
அம்மா நான் சுவனத்தை தேடுகிறேன் உனக்கு வழி காட்டிய இறைவன் வழியிலேயே

Sunday, 12 May 2013

‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியும்’


அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!
 தந்தை பணம் செலவழித்து என்னை ‘பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. ‘இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே’ என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து ‘ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க’ என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக ‘உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே’ என்பதுடன் ‘ நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட கோழிக்குதானே அதன் சிரமம் தெரியும்’ என்பார் அம்மா. ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று’ முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப் போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.

Sunday, 7 April 2013

பெண்ணின் படைப்பு உயர்வானது

பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின்  பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது
பெண்ணின் ஊக்குவித்தல் ஆண் வெற்றிக்கு அடித்தளம்
பெண்ணின் பெருந்தன்மை ஆண்களுக்கு அமைதியைத் தருகிறது
பெண்ணின் பெருமை ஆண்களை சிறப்பிகின்றது
பெண்ணின் பெருமை மேலோங்க பார்வையை தாழ்த்திக் கொள்வார்கள்
பெண்ணின் அழகு அவர்களது உள்ளத்தில் ஆடையில் அல்ல
பெண்ணில்லா உலகில் வாழ்வேது
பெண் பெற்ற கல்வியால் குடும்பமே உயர்வடைகின்றது
பெண்ணைப் பெற்றோர் பாசத்தைக் காட்டுவார்
பெண் பிள்ளை பெறாதவர்  பரிதாபத்திற்குரியவர்..
பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது.

Monday, 25 March 2013

உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி

அம்மாவின் கருவின் நீர் தடாகத்தில்
அம்மாவின் அறிவின் ஊற்றில் மிதந்து
அம்மாவின் அறிவை கருவிலேயே உள்வாங்கி
அம்மாவின் மனம் மகிழ வந்துதுதித்த கவிஞன்

கவிஞன் பிறக்கிறான் கருவறையில் கற்பிக்கப்பட்டு
கலைஞன் கற்கிறான் கண்டதையும் கற்று
நடிகன் நடிக்கிறான் கண்டதையெல்லாம் பெற்றுவிட
பேச்சாளன் உருவாகிறான் தனக்குத்  தானே

அரசியல்காரன் அடுத்த தேர்தலை சிந்திக்கிறான்
நல்லாட்சி தர விரும்புபவன் பரம்பரையை  சிந்திக்கிறான்
சொல்லாட்சி கற்று பொய்சாட்சி சொல்கிறான்
மக்களாட்சி வேண்டி மக்களாட்சியை கலைக்கிறான்

உலகம் சுற்றுவதுபோல் ஆட்சி முறையும் சுற்றும்
மன்னராட்சி கெட மன்னர் கொடுங்கோலனாக மாற
மன்னராட்சியை கலைத்து உயர்ந்தோர் ஆட்சிக்கு வர
உயர்ந்தோர் உயர்வைப் போக்க கொடுங்கோலன் கையில் ஆட்சியை அடைய
மக்கள் புரட்சியால் மக்களாட்சி மலரும்
மக்களாட்சியில் ஊழல் வர திரும்பவும் சுழர்ச்சி முறைதான்
உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி 

Sunday, 24 March 2013

பாசம்காட்டி பணிவிடை செய்து ஆசிரியராய் இருந்து உருவாக்கியவள்!

 இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.


பெண் குழந்தையாக இருக்கும் போது வீடு கட்டி விளையாடுவாள் பின்பு பூச் சூடி மகிழ்வாள். அந்தப் பூவின் மனம் மகிழ ஒரு மணமகனை நாடுவாள். அந்த மணமகன் கிடைத்த பின்பு தான் மணம் வீசும் மலராக இருந்து அவனது மனம் மகிழ வைப்பாள். அவனால் கிடைத்த பரிசான பிள்ளைகளை பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து வந்த தாயாகவும் கணவனுக்கு சேவை செய்யும் மருத்துவ தாதியாகவும், அக மகிழ வைக்கும் இனிய இன்பம் தரும் இல்லக்கிழத்தியாகவும், விடியல் விழித்திடும் முன்னே விழித்து சுவையுடன் சமைத்து தரும் அடுபன்கரை அரசியாகவும் இருந்து தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைக்கின்றது.