Sunday 12 May 2013

‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியும்’


அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!
 தந்தை பணம் செலவழித்து என்னை ‘பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. ‘இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே’ என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து ‘ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க’ என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக ‘உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே’ என்பதுடன் ‘ நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட கோழிக்குதானே அதன் சிரமம் தெரியும்’ என்பார் அம்மா. ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று’ முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப் போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.
  இனி வேலை தேடும் படலம் ஆரம்பமானது. தினம் அது நிமித்தமாக கடுமையாக முயற்சித்தேன். திரும்பவும் அப்பா ஆரம்பித்து விட்டார் ‘அப்பொழுதே சொன்னேன் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படிக்க ஆனால் இவன் மெக்கானிகல் படிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தான்.அதற்கு இவன் அம்மா வேறே சிபாரிசு அவன் இஷ்டத்திற்கு படிக்கட்டுமே என்று அதான் இப்ப வேலை தேடி அலையறான் நான் சொன்னபடி கேட்டிருந்தா அருமையான வேலை நல்ல சம்பளத்தோட கிடைத்திருக்கும்’ என்பார்.

 நேர்முக தேர்வு சென்று களைத்து போய் வரும்போது அப்பா கேட்பார் ‘இந்த தடவையாவது வேலை கிடைக்குமா?’ கிடைச்சாலும் சம்பளம் ஒன்னும் பெரிசா இருக்காது. பர்மனென்ட் வேலையா இருக்குமா? இவன் நிலையா ஒரு இடத்தில இருக்க தகுதியான தன் திறமையை வளர்த்துக்குவானா? இப்படி அடுக்கடுக்கான வார்த்தைகள் அவர் வாயிலிருந்து அடைமழைப் போல் கொட்டிக் கொண்டேயிருக்கும்.அது எனக்கு நெருப்பில் எண்ணையை ஊற்றியதுபோல் இருக்கும். அந்த நேரத்தில் அம்மா ‘நீ வாப்பா சாப்பிட பசியோட வந்திருப்பாய்’ என்று அழைத்து செல்லும்போது அது எனக்கு சூடான நெருப்பில் நீர் ஊற்றி அனைத்ததுபோல் மன அமைதி அடையும்.

 அதுதான் அம்மா. “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம் ஏது? அந்த அம்மா இருக்கும் போதே அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால் ஒரு பயனுமில்லை.

4 comments:

  1. சாப்பிட்டாயா...? என்கிற கேள்வி தாயைத் தவிர யாரும் கேட்க மாட்டார்கள்...

    பகிர்வு நெகிழ வைத்தது...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. @ திண்டுக்கல் தனபாலன்
    நீங்கள் தரும் கருத்துரை மனதை நெகிழ வைக்கிறது..

    ReplyDelete
  3. http://thisisonyourbirthday.blogspot.in/2013/05/blog-post.html

    ReplyDelete
  4. மிக்க நன்றி nazeer Kadhar அவர்களுக்கு

    ReplyDelete