Sunday, 7 April 2013

பெண்ணின் படைப்பு உயர்வானது

பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின்  பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது
பெண்ணின் ஊக்குவித்தல் ஆண் வெற்றிக்கு அடித்தளம்
பெண்ணின் பெருந்தன்மை ஆண்களுக்கு அமைதியைத் தருகிறது
பெண்ணின் பெருமை ஆண்களை சிறப்பிகின்றது
பெண்ணின் பெருமை மேலோங்க பார்வையை தாழ்த்திக் கொள்வார்கள்
பெண்ணின் அழகு அவர்களது உள்ளத்தில் ஆடையில் அல்ல
பெண்ணில்லா உலகில் வாழ்வேது
பெண் பெற்ற கல்வியால் குடும்பமே உயர்வடைகின்றது
பெண்ணைப் பெற்றோர் பாசத்தைக் காட்டுவார்
பெண் பிள்ளை பெறாதவர்  பரிதாபத்திற்குரியவர்..
பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.”
என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.(புகாரி ஹதீஸ்1905.)

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். .(புகாரி ஹதீஸ்1.)

No comments:

Post a Comment