அம்மாவின் அறிவின் ஊற்றில் மிதந்து
அம்மாவின் அறிவை கருவிலேயே உள்வாங்கி
அம்மாவின் மனம் மகிழ வந்துதுதித்த கவிஞன்
கவிஞன் பிறக்கிறான் கருவறையில் கற்பிக்கப்பட்டு
கலைஞன் கற்கிறான் கண்டதையும் கற்று
நடிகன் நடிக்கிறான் கண்டதையெல்லாம் பெற்றுவிட
பேச்சாளன் உருவாகிறான் தனக்குத் தானே
அரசியல்காரன் அடுத்த தேர்தலை சிந்திக்கிறான்
நல்லாட்சி தர விரும்புபவன் பரம்பரையை சிந்திக்கிறான்
சொல்லாட்சி கற்று பொய்சாட்சி சொல்கிறான்
மக்களாட்சி வேண்டி மக்களாட்சியை கலைக்கிறான்
உலகம் சுற்றுவதுபோல் ஆட்சி முறையும் சுற்றும்
மன்னராட்சி கெட மன்னர் கொடுங்கோலனாக மாற
மன்னராட்சியை கலைத்து உயர்ந்தோர் ஆட்சிக்கு வர
உயர்ந்தோர் உயர்வைப் போக்க கொடுங்கோலன் கையில் ஆட்சியை அடைய
மக்கள் புரட்சியால் மக்களாட்சி மலரும்
மக்களாட்சியில் ஊழல் வர திரும்பவும் சுழர்ச்சி முறைதான்
உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி
No comments:
Post a Comment