Sunday, 24 March 2013

பாசம்காட்டி பணிவிடை செய்து ஆசிரியராய் இருந்து உருவாக்கியவள்!

 இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.


பெண் குழந்தையாக இருக்கும் போது வீடு கட்டி விளையாடுவாள் பின்பு பூச் சூடி மகிழ்வாள். அந்தப் பூவின் மனம் மகிழ ஒரு மணமகனை நாடுவாள். அந்த மணமகன் கிடைத்த பின்பு தான் மணம் வீசும் மலராக இருந்து அவனது மனம் மகிழ வைப்பாள். அவனால் கிடைத்த பரிசான பிள்ளைகளை பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து வந்த தாயாகவும் கணவனுக்கு சேவை செய்யும் மருத்துவ தாதியாகவும், அக மகிழ வைக்கும் இனிய இன்பம் தரும் இல்லக்கிழத்தியாகவும், விடியல் விழித்திடும் முன்னே விழித்து சுவையுடன் சமைத்து தரும் அடுபன்கரை அரசியாகவும் இருந்து தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைக்கின்றது.



குழந்தை இவ்வுலகில் வர இறைவனது அருள் வேண்டும். அந்த எல்லாம் வல்ல,கருணை மிக்க எங்கும் நிறைத்த  இறையோனைப் பற்றி தெரித்துக் கொள்ள சிறந்த ஆசிரியர் தேவை. அந்த ஆசிரியர் இறைபக்தி உடையவராக இருப்பது நல்லது .
முதலில்  இறைவனது பெயரைச் சொல்லியும் அவனது அருள் நாடியும்  அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...குழந்தைக்கு    பெயர் சூட்டுவதோடு தாய் தனது பாலை தன்  குழதைக்கு    ஊட்டிவிடுகின்றாள்.  அது தொடர்கின்றது அதுவே அந்த குழந்தை இறைவனின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கின்றது .

அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வியின் மீது நாட்டம் கொள்கின்றான்

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! 20:114.-குர்ஆன்
என்ற திருமறையின்  வார்த்தையை மனனம் செய்து அதன் நம்பிக்கையோடு படிக்கும் போது அவனது கல்வி அறிவு வளர்சியடைகின்றது 
 எது நல்லது எது கெட்டது என்பதனை தெரிந்து நல்லது  நாடி கெட்டதை விட்டு விலகி வாழ  முயல்கின்றான். அந்த ஆசிரியரும் ,தாயும்,தந்தையும் மற்றும்  உடன் இருப்போரும் நல்லவர்களாக இருந்து  விடும்போது அவனது வாழ்வும் சிறப்படைகின்றது . அதுவே மாற்றமாக இருக்க நேரிட்டால் அனைத்தும் கெட்டு அவனது வாழ்வு மோசமாகிவிடும் . அதனால் நாம் ஆசிரியரை தெரிவு செய்வதில்  கவனம் தேவை.

No comments:

Post a Comment