Wednesday 10 July 2013

நன்மையைத் தேடுவதில் ஆரோக்கியமான போட்டி தேவை.

அவர்  வீடு கட்டிவிட்டார் அதை விட சிறப்பான வீடு நாமும் கட்ட வேண்டும் .
அவர் கார் வாங்கி விட்டார் அதை விட உயர்வான கார் நாமும் வாங்க வேண்டும் .
அவர் பணக்காரர் ஆகி விட்டார் அவரை விட நாம் பெரிய பணக்காரர் ஆக வேண்டும் .
இம்மாதிரியான போட்டி மனப்பான்மை பொறாமையின் விளைவு .


பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.

அவர்  வீடு கட்டினாலும் அவர்  மற்றவர்களுக்கும் வீடு கட்ட உதவுகிறார் . நாமும் அம்மாதிரி மற்றவர்களுக்கு  உதவ வேண்டும்
அவர் கார் வாங்கினாலும் அவர் தனது காரை  மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுகிறார் . நாமும் அம்மாதிரி வாகனம் வாங்கி  மற்றவர்களுக்கு  உதவ வேண்டும்
அவர் பணக்காரர் ஆனாலும் அவரது பணம் பலருக்கு உதவுகிறது அதனால் அவரை அனைவரும் வாழ்த்துகிறார்கள் .அம்மாதிரி நாமும் வர வேண்டும் .முடிந்தால் அவரைவிட சிறப்பாக மக்களுக்கு உதவ வேண்டும் .
இம்மாதிரியான நல்ல நோக்கத்தோடு போட்டி போடுவது நமக்கும் மற்றவருக்கும் பலன் தரும் .

இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :7529 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

  ‘ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
புஹாரி :73 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)

‘இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக!’ (குர்ஆன் 113:5)
‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’ (குர்ஆன் 2:153)

2 comments: