Monday 15 July 2013

கவலை ,துயரம் இல்லாதவர் யார் !

துன்பம் வர துயலாதே !
துன்பத்தையும் நன்மையாக்கும் ஆற்றல் உன் மனதில் உள்ளது .
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும். துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும் .
நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! .
நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ? நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது.

எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்
நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை. வாடைக்குப்பின் தென்றல் வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கோடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .
காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும் என்ற பேராசை ஏன்?
நிழலின் அருமையை வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும் போதுதான் மகிழ்வினை முழுமையாக அறிய முடியும்.

துன்பம் வருவதை ஒருவரும் விரும்புவதில்லை.
துன்பம் வருவது வாழ்வின் அடிப்படை உண்மையை உணர்த்தும்.
மற்றவர் படும் துன்பத்தினை அறிய மனம் கசியும்.
அனைத்துக்கும் மேலாக இறைவனோடு ஒன்றி அவனை தொழும் சிறப்பு வந்தடையும் .
இருளுக்குப் பின் ஒளி உண்டு.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.-குர்ஆன் 94:5

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.-குர்ஆன் 94:6

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும்
(இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.-குர்ஆன் 94:7

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.-குர்ஆன் 94:8

1 comment:

  1. பகிர்வை வாசித்த பின் இந்த பாடல் ஞாபகம் வந்தது :

    எங்கே வாழ்க்கை தொடங்கும்...? அது எங்கே எவ்விதம் முடியும்...?
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது...
    பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்...
    மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்...

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...

    ReplyDelete