Monday 22 July 2013

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிணக்கு விவாகரத்தின் முடிவா!

கணவன் மனைவிக்குள் அளவிலா அன்பும் அறியமுடிய, அறியமுடியா பிணக்கும் வருவதுண்டு .
கணவன் மனைவிக்குள் இருக்கும் அளவிலா அன்பினை மறைத்து வாழ்வார்.
கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனைகளை, பிணக்குகளை மட்டும் தங்கள் உறவினர் நண்பர்களிடம் சொல்வதை அல்லது காட்டிக் கொள்வதை தயங்குவதில்லை .

கணவன் மனைவிக்குள் வந்துள்ள பிரச்சனைகளை, பிணக்குகளை முறையாக நன்னோக்கம் கொண்டு தீர்த்து வைக்க முயல்பவர்கள் குறைவு . சமாதானம் செய்ய வருபவர்கள் உணர்ச்சி வசப் படுபவர்களாகவும் ஒரு பக்கம் சார்ந்தவர்களாகவும் மாறி விடுகிறார்கள் .

கணவன் அல்லது மனைவி தங்களுக்குள் இருக்கும் உயர்வை மட்டும் நோக்காமல் தங்களிடம் உள்ள குறைகளையும் அறிய வேண்டும் . குறை அறிந்தால்தான் திருத்திக் கொள்ள முடியும். குறை உடையவர்களின் குணமறிந்து வாழ்கையை தொடர முடியும் .நல்லதும்,கெட்டதும் சேர்ந்தும் ஒரு பொருளுக்கு இருப்பதுபோல் ஒரு மானிடருக்கும் உண்டு என்பதனை நாம் மறக்கிறோம் . ஒரு பொருள் பழுதானால் சீர் படுத்த நாம் எடுக்கும் முயற்சியை மானிடரின் குணத்திற்கு வரும் அழுக்குகளை சீர் படுத்த நாம் முயல்வதில்லை .
அவசர முயற்சி ஆபத்தில் முடியும் . அவசர முடிவும் விவாகரத்தில் முடியும் .


கணவனும் மனைவியும் ஒரு உடன்படிக்கையின் வாழ்வைத் தொடங்கினாலும் தொடங்கும் போது யாரும் உடன்படிக்கை முறிவைப் பற்றி நினைப்பதில்லை . சேர்ந்து இணைந்து வாழவே இல்லறத்தினை தொடக்கி இறக்கும் வரை பொறுமை, அன்பு ,காதல்,பாசம் இவைகளால் பிணைக்கப் படுகிறார்கள் . இடையூருகளை தம்பதிகள் எதிர் கொள்ளும் ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பது அவசியம். மற்றவர்களால் வரும் இடையூருகள் அவர்களை பிரித்து விடாமல் மற்றவர்கள் அவர்களை இணைந்து வாழ உறுதுணையாக இருப்பது மற்றவர்களின் கடமை

(மனைவிகளாகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19)



நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

“பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம், அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம், அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை விட மேலானவள்” அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி)  ஆதாரங்கள்: இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத்.



மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ):-

  நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹ_லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

 பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹ_ரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

 (பரகத்) என்னும் அரபி சொல்லுக்கு “புலனுக்கெட்டாத இறை அருள்” என்பது பொருள்.

3 comments:

  1. There is no such thing as incompatible in a marriage. It's a mind-set. Conjugal bliss hinges on the understanding of the couples about each other.

    ReplyDelete
  2. பிரச்சனையை மற்றவர்களிடம் சொன்னால் பெரிதாகும், தவிர குறையாது... தீராது... இரு மனங்களும் இணைந்தால் பிரச்சனை ஏது...?

    ReplyDelete
  3. every marriage needs some understanding, adjustment and sacrifice to lead a happy life.. nice and quite a thoughtful write up..

    ReplyDelete