Sunday 28 July 2013

அழுக்கான பணம்


நம் உடலில் ஏற்படும் சிறிய காயம் மீது நமக்கு கவனம் வருவதில்லை
 நாம் விழுந்த இடத்தில நாம் தேடுவது பையிலிருந்து உதிர்ந்து ஓடிய காசுகளை
காசுகள்(பணத் தாள்கள் ) அழுக்கானாலும் துடைத்து வைத்துக் கொள்கிறோம்
இது தனிச்சையாக அனிச்சை செயலாக நடைபெறும் செயல்.
(உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் ஏற்படுகின்றன. )

இரு சக்கர வண்டியை ஓட்டும்போது நாம் தவறி விழ நம்மைப் பற்றியோ நம்முடன் பற்றியோ சிந்திப்பதில்லை
அறிந்து தவறான, பாவமான முறையில் சேர்க்கப்படும் பணம் அழுக்கானதுதான்.


அறிவு சில நேரங்களில் ஒதுங்கி நிற்கும்
அனிச்சை செயல் முன் நிற்கும்
தூக்கத்தில் நம்மை அறியாமல் கொசுவை அடிப்பது போல்.

வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது இது பிரேக் .இது ஆக்சிலேட்டர்  என்ற நினைவோடு செயல்படுகிறோம் ,
வண்டி நன்றாக  ஓட்டத் தெரிந்த போது  இயற்கையாகவே அவசர காலத்தில் தானே நம் உறுப்புகள் செயல்பட ஆரம்பிக்கும் .

முதலில் கவிதை ,கட்டுரை எழுத முயலும்போது அதிகப்படியான முயற்சி தேவைப் படுகிறது. பழகிப் போனவருக்கு அருவிபோல் கற்பனைகள் கொட்டும் .நினைத்ததையெல்லாம் சாதரணமாக ஆர்வத்தின் மிகுதியால் தொடர்ந்து எழுதுவார்கள் .அவர்களால் எழுதாமல்  இருக்க முடிவதில்லை. இதே நிலைதான்  பேச்சாளர்களுக்கும்

2 comments:

  1. நல்ல எடுத்துக்காட்டு...

    பழக பழக எதுவும் வழக்கமாகி விடும்....

    ReplyDelete
  2. உங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே

    ReplyDelete