Tuesday, 30 July 2013

தீவிரவாத செயலை திரித்து பேசும் நிலை


காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில் வந்தவர்தான். அங்கு நடக்கும் ஒரு தீவிரவாத செயலிலும் ஈடுபடும் ஒரு தீவிரவாதியும் முஸ்லிமாக இருக்கலாம் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும் பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை ஊக்குவித்து அதில் ஆதாயம் தேடுபவராக உள்ளனர் . ஊடகங்களும் அதற்க்கு தூபம் போடுகின்றனர்
 இஸ்லாம் தீவிரவாத்தினை ஆதரிக்கவில்லை .
ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். 
உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்


முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள் .ஹதீஸ் 49:11.

முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். ஹதீஸ்  49:9.

3 comments:

  1. I agree with you 100%. Yours is a reality statement.

    ReplyDelete
  2. I agree with you 100%. Yours is a true statement.

    ReplyDelete
  3. @Arumugam Easwar
    Thank you very much for your comment.

    ReplyDelete