Friday, 19 July 2013

விதி ஒன்றிருக்க அதனை யாரால் மாற்ற முடியும் !

காட்டுக்கு போனான் குருவியைச் சுட
மரத்தின் உச்சி மீது அமர்ந்திருந்த
குருவியைச் சுட குறி வைத்தான்
விட்ட குறி தவறாகி குருவி தப்பித்து பறந்தது .
வேடன் விட்ட அம்பு மேல் சென்று அவன் தலையில் விழ
அம்பு விட்டவன் மாய்ந்தான் ,
அவ்வழி வந்த நரி மாண்ட அவனை தின்ன நினைக்கு முன் ஒரு சபலம்!
மாண்டவன் கிடப்பான் அதற்குள் அவன் கொணர்ந்த வில்லில் உள்ள நானை தின்போம்
என்ற முடிவுக்கு வந்தது .
நரி வில்லின் நானைக் கடிக்க நான் அறுந்து வில்லின் விரிந்த முனை நரியின் பொட்டைத் தாக்க நரி செத்தது .

குருவி தப்பித்தது
வேடன் இறந்தான்
நரி செத்தது .
இதுதான் விதி

விதியை ஆய்வு செய்வோர் இரு கால்களையும் தூக்கி நிற்பவருக்கு சமமாவோர்  

 விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம்




 ஆயிஷா(ரலி)கூறினார்கள்" நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைவது விட்டீர்கள்' என்று கூறினார். - புகாரி ஹதீஸ் 1241.

4 comments:

  1. சொல்லப்பட்ட உதா'ரண'மும் அருமை...

    ReplyDelete
  2. The way you explain about fate is superb.

    ReplyDelete
  3. நன்றி உங்கள் கருத்துரைக்கு திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே

    ReplyDelete
  4. நன்றி உங்கள் கருத்துரைக்கு திரு. Arumugam Easwar அவர்களே

    ReplyDelete