Wednesday 3 July 2013

ஆக்கலும் அழித்தலும்

ஆக்கல் கடினம். அழித்தல் எளிது
ஆரம்பிப்பது எளிது தொடர்வது கடினம்

வாழ்நாள் சிறிது
வளர்கலை பெரிது

நாளாகும் நட்பை வளர்க்க
நிமிடம் போதும் நறுக்க

திருமணம் வாழ்க்கையின் ஒரு பகுதி
திருமண வாழ்க்கை பெறும் பகுதியை ஆக்ரமிக்கும்

திருமண வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் வந்து போகும்
திருமண வாழ்க்கையில் காதல் ஊடுருவி பரம்பரையை வளர்த்துவிடும்

பரம்பரை வளர பாசம் மிகைத்து நிற்கும்
பாசம் வளர வாழ்வில் பிடிப்பு மிகைக்கும்

ஆக்ரமித்த பகுதியில்தான் வாழ்வே நிறைவடையும்
ஆக்ரமித்த பகுதியில்தான் வாழ்வை அறிந்து கொள்ள முடியும்
ஆக்கலும் அழித்தலும் ஒருவன் தன் வசம் வைத்து நம்மை ஆட்டிப்படைக்க
ஆக்கினேன் அழித்தேன் என்று ஆக்கப் பட்டவன் பெருமை கொள்கிறான்
ஆக்கலை அறியாதவன் தன்னை அழித்துக் கொள்ள உரிமை ஏது

ஆக்கியதை அழிப்பான் ,அழித்ததை உருவாக்குவான் அது ஆண்டவனே (இறைவனே )
ஆண்டவனே (இறைவனே ) ஆக்குவதும் அழிப்பதும் நன்மையைக் கருதியே
ஆண்டவனின்  (இறைவனின் ) ஆற்றலை நம்மால் அறிய முடியுமோ!

2 comments: