Friday, 11 October 2013

சீதனம் கேட்டதால் (வரதட்சனையால்) இழந்தது

சீதனம் தரவில்லை
மணமகன் வரமாட்டான்
மணமகன் பெற்றோர் சொன்னது

சமாதானம் பேசப்பட்டது
சீதனம் வருமென்று

மணமகன் மணமகள் வீட்டிற்க்கு போனான்
மணமகளை பார்த்தான் கொஞ்சினான்

போன மகன் மணமகள் வீட்டிலேயே தங்கி விட்டான்
பெற்ற மகனையும் இழந்தார்
சீதனத்தையும் இழந்தார்
சீதனம் கேட்ட பெற்றோர்

ஆண் கொடுத்து முடிக்க இருக்க
பெண் கொடுத்து முடிப்பது ஆண்மையோ!

மகர் கொடுத்து முடிப்பதே திருமணம்
சீதனம் கேட்டு முடிப்பது திருமணமாகுமோ!

மணம் இருமனத்தால் இணைவது
மனம் பணத்தால் இணையுமோ !

அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)

No comments:

Post a Comment