Wednesday, 23 October 2013

வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.

இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும்

நேர்மையாக வாழும் நாம் ஏன் வெட்கப்படவண்டும் !

புகழ் வந்த பெரியவரைக் கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது உனது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு.தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும் அவருக்கு கிடைத்த புகழுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும் . நீ ஒதுங்காதே.

வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு உட்பட்ட செயல். தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம் உன்னிடம் எதோ குறை உள்ளதாக என்று எண்ணி உன்னையே நீ தாழ்த்திகொள்ளாதே! உன்னிடம் குறை உள்ளதாக இத்தனை நாள் நீ எண்ணி இருந்தால் அதற்காக வெட்கப்படு. உன்னை காட்டிலும் கீழ் உள்ளவரை நினைத்துப் பார் . உடல் மாற்றம் ஏற்படுவது இயற்கை. தலை முடியில் நரை விழுந்துவிட் டதே! கட்டையான உயரத்தில் அதிலும் குறிப்பாக கருப்பாக உள்ளோமே என்பது உன்னை தாழ்வாக மதிப்பதால் வரும் வினைதான். சுவையும், ரசிக்கும் தன்மையும் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது . வேண்டாம் இந்த மனக் கோளாறு . நம்மிடம் எல்லாம் உள்ளது இதனைக் கொண்டு எதனையும் செய்ய இயலும் என்ற உயர்ந்த நோக்கினை உன்னிடம் பொருந்திக்கொள் .வாழ்வது ஒரு முறை . வாழ்ந்து காட்டு. நல்லதை நாடு. வாழு. வாழ வழி விடு . இது போராடும் உலகம் . போராடும் பொழுது உனது உள் மனதில் உன் வெற்றிதான் உனக்கு முக்கியம். போரில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர்களுக்கே வெற்றி . முதல் வெற்றி அடுத்த வெற்றிக்கு ஊன்று கோல். பொருந்திகொள்ளும் வாழ்வே வாழ்வின் வெற்றியின் திறவுகோல் . ஒதுங்காதே ஒன்றிவிடு . நாம் நினைப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை வை . உன்னைக் காட்டிலும் தாழ்ந்தவரை எண்ணி அமைதி அடை. உன்னை விட உயர்ந்தவரைக் கண்டு நம்மாலும் அவ்வாறு வர முடியும் என்ற எண்ணத்தில் வேகமாக விவேகமாக, காலம் தாழ்த்தாமல் செயல்படு .

1 comment:

  1. /// நாம் நினைப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை வை... ///

    சிறப்பான வரிகள் பல.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete