Thursday, 31 October 2013
கிடைத்த நாட்கள் உயர்வானவை
காத்திருந்தேன் காத்திருக்கிறேன் அந்த நாள் வருமென்று
காத்திருந்த நாட்கள் கடந்து போயின காரியம் முடியாமல்
காத்திருக்கும் நாட்கள் வருகையை நோக்கி களைத்தும் போனேன்
காத்திருக்கும் நாட்களை மறந்து கிடைத்த நாட்களை பயன் படுத்தாமல் போனேன்
கிடைத்த நாட்கள் உயர்வானவை
நினைத்த என்ணங்கள் உயர்வானவை
மற்றவர்கள் மாற்றாக நினைப்பார்களோ என செயல் படுத்த வில்லை
மற்றவர்கள் நிறைவாக போற்றி இருப்பார்கள் நான் நினைத்தது நிறைவேற்றியிருந்தால்
காலங்களை ஒத்திபோட கனவுகள் கலைந்து விடும்
காலங்களையும் நேரங்களையும் நமதாக்கிக் கொள்ள வேண்டும்
அனைத்துக்கும் இரண்டு பக்கங்கள்
செயலின் விளைவும் இரண்டு வினைகள்
செய்த செயல் நினைத்த படி நடக்கலாம்
செய்த செயலில் நினைக்காதவைய்ம் நடக்கலாம்
இரண்டுக்கும் செயல் தேவை
செயலே இல்லாமல் எதுவுமில்லை
செய்ய வேண்டியதை செய்துவிடு
செயலின் முடிவை இறைவனிடம் விட்டு விடு
செய்ய வேண்டியதை செய்து விடு
செய்தவைக்கு இறைவனிடம் பாதுகாப்பு தேடு
Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... ஆர்வத்துடன் செயல் இருக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...
ReplyDelete