Friday, 11 October 2013

அருமையான தத்துவங்களை உள்ளடக்கிய காதல் கவிதைகளைக் கண்டால் .....

தத்துவங்களை தந்தவர்கள் புகழை தட்டிச் சென்றார்கள்
தத்துவம் விஞ்ஞானம் வர வழி வகுத்தது.

தத்துவம் விதை
தத்துவம் தந்த பழம் விஞ்ஞானம்

தத்துவ மனதுக்குள் மோகம் உள்ளடக்கி இருக்கும் .காதல் சுடர் விடும் . காதலிக்கிறேன் உன்னை எப்போதும் என்பதை சொல்லாமல் சொல்லும் .

சில நேரங்களில் Platonic Love ஆகவும் இருக்கலாம். என்னை நேசித்தவர்களை (காதலித்தவர்களை ) கண்டு கொள்ளாமல் போனது நினைவில் வந்து வாட்டுகின்றது .

மலரைச் சுற்றி வரும் வண்டுகள் யெழுப்பும் ரீங்கார ஒலி மனதை வருடுகின்றது.

அதனால்தான் பலவித ஆக்க பூர்வ எண்ணங்களில் மிதக்கிறேன் .
இளமை இன்னும் மனதில் ஊஞ்சலாடுகிறது .
உண்மையைச் சொன்னால் நான் நானே பேசிக் கொண்டு மனதில் இழையும், இழையோடும் எண்ணங்களும் அருவி போல் கொட்டச் செய்கின்றதை உணர்கின்றேன்.

தவறு என்னிடமா? அல்லது கவிதை தன்னகத்திலே பெற்றிருக்கும் காதல் தத்துவத்தின் தூண்டுதலா?

அது எதுவோ! என்னை மறக்க வைக்கும் இனிய நேரங்கள் மற்றும் மகிழ வைக்கும் காலங்கள் தொடரட்டும் !
உனை நினைத்து எனை மறப்பேன்!

4 comments:

  1. ஆகா... ரசித்தேன்... தொடரட்டும்...

    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அது எதுவோ! என்னை மறக்க வைக்கும் இனிய நேரங்கள் மற்றும் மகிழ வைக்கும் காலங்கள் தொடரட்டும் ! :-)

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. அன்பு அன்புடன் புகாரி அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்வு

    ReplyDelete