கனவுகளை கற்பனையோடு கலந்து
கலையாய் கவிதையை வடித்தேன்
குடித்த பாணத்தில் இனிப்பில்லை என்பதுபோல்
படித்த கவிதையில் பிடிப்பில்லை என்றனர்
வாயில் ஊறிய உமிழ்நீர் உண்ட உணவை செரிக்கச் செய்யும்
கவிதை வடிவில் வந்த வரிகள் அறிவு வளரச் செய்யும்
முதல் எழுத்து ஒன்றி வந்து மோனையாகி
இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வந்து எதுகையாகி விடும்
கவிதையில் எடுத்து வைத்த எழுத்துகள் அசையாக வில்லை
அசைகளால் எடுத்து வைக்காமல் அது சீர்களாக வில்லை
கனவுகள் கலைந்து வந்தமையால் நினைவில் நின்று சீராகவில்லை
வரிகள் கலைந்து வந்தமையால் நினைவில் நிற்கும் கவிதையாகி சிறப்பாகவில்லை
அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதுன்பத்திற்கு மருந்து என்ன...? முந்தைய பகிர்வின் தொடர்ச்சியாக... குறளின் குரலாக... : நான் + துன்பம்
ReplyDelete