மல்லிகை மணம் வீசும்
மல்லிகையை முடியில் வைக்க மணம் பரப்பும்
மணம் கொடுக்க மனம் மகிழும்
மனம் மகிழ்வில்லை மல்லிகை சூடி மணம் மகிழ்விக்க
மனம் வாட மற்றவர் மனம் மகிழ மல்லிகை ஏன்
உன் மனதின் வேதனை உனை விட்டு நீங்கும்
மற்றவருக்கு நீ கொடுக்கும் மகிழ்வினால்
நாம் மகிழ மற்றவரை மகிழ்வித்தல் உயர்வு
நாம் மற்றவரை மகிழ்விக்க நம் வேதனை நம்மை விட்டு அகலும்
நம் வேதனை நமக்குள் தேங்கி நிற்க
நம் வாழ்வே வேதனைதான்
இருக்கும் வேதனை சேவையால் விலகும்
செய்யும் சேவை மகிழ்வை பரப்பும்
சேவை இருண்ட இடத்தில இருப்பதல்ல
சேவை மக்களோடு சேர்ந்திருப்பது
தன்னை உயர்த்திக் காட்டி நிற்பது பனைமரம்
தன்னை பரப்பிக் காட்டி நிழல் தருவது ஆலமரம்
தனி மரம் தோப்பாகாது
தனிமை மகிழ்வை தராது
// தன்னை பரப்பிக் காட்டி நிழல் தருவது ஆலமரம் //
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...