Wednesday, 30 October 2013

வேற்றுமையில் ஒற்றுமை

உங்கள் விருப்பம் வேறு
என் விருப்பம் வேறு

உங்கள் ரசனை வேறு
என் ரசனை வேறு

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ரசனை
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விருப்பம்

எல்லோரும் ஒரே ரசனை பெற்றிருந்தால்
எல்லோருக்கும் பிரச்சனை

உங்கள் ரசனையோடு
உங்கள் விருப்பத்தொடு
ஒத்து வர வேண்டுமென்று நிர்பந்தித்தால்
நிராகரிப்புத்தான் மிஞ்சும்

நான்  உங்கள்  விருப்பத்தொடு இணைந்துப் போக  நீங்கள்  விரும்பினால்
நான் அதற்கு உங்கள் ஆட்டத்திற்கு நான் அடங்க வேண்டும்

நான்  உங்கள்  விருப்பத்தொடு இணைந்துப் போவதால்
நான் இறைவனின் விருப்பத்திற்கு உள்ளாகி விடுவேனா!

நான் நானாக இருப்பேன்
நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்
நமக்குள் நட்பு தொடரும்
நமக்குள் இறைவனின் நாட்டம் வளரும்
நாம் உடன்படுவது அதில்தான்
இதுவே வேற்றுமையில் ஒற்றுமை

1 comment:

  1. நான் நானாக இருப்பேன்
    நீங்கள் நீங்களாக இருப்பீர்கள்
    நமக்குள் நட்பு தொடரும்

    அருமை... தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete