சிந்திப்பதால் உயர்வு
சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு
செயல்படுத்தியது ஆற்றல்
செயல்படுத்தியதின் பலன் விளைவு
பல விதைகள் விதைத்து சில செடிகள்
சில செடிகள் பல விதைகள் தந்தன
செடிகளின் இலைகள் உதிர்வது காலத்தின் மாற்றம்
செடிகளின் இலைகள் உதிர்ந்து எருவாகி செடிக்கே பலனை தந்தது
பல சிந்தனைகள் சில சிந்தனைகளை ஊக்கு வித்தன
சில சிந்தனைகள் பல பலன்களை தந்தன
சிந்தனைகள் சிதறாமல் இருக்க ஓர் நிலைப் படுத்தல்
ஓர் நிலைப் படுத்தல் உயர்வுக்கு வழி
ஓர் நிலைப் படுத்தி தொழுதிடு
உனக்கோர் அமைதி கிட்டும்
சித்திக்கும் ஆற்றல் தந்து சிறப்பிததவன் இறைவன்
சித்திக்கும் ஆற்றல் இருந்தும் இறை சிந்தனை வராமல் போவதேன்
பிறப்பும் இறப்பும் தந்தவன் இறைவன்
இறப்புக்குப் பின் இன்னொரு பிறப்புண்டு
அப்பிறப்பின் நிலை இப்பிறப்பின் நிலையை வைத்து
மறுபிறப்பின் நிலை உயர்ந்திருக்க
இப்பிறப்பின் நிலையை உயர்த்திக் கொள்
மறுபிறப்பின் நிலை சுவனமா! நகரமா !
இறைமறை வேத வழி வாழ்ந்து இறை அருள் பெற்றிடு
நம்பிக்கை இறை மீது இருக்கட்டும்
ஓரிறை நம்பிக்கை வேத வழி வாழ்க்கை சுவனத்தின் வழி
ஒரு முழம் நெருங்க ஒரு பாகம் உனை நெருங்குவான்
அருளாளன் அன்புடையோன் உனை உயர்த்தி நிறுத்துவான்
// ஓர் நிலைப் படுத்தல் உயர்வுக்கு வழி //
ReplyDeleteவாழ்த்துக்கள்...