சொல்ல மறந்தது செயல்
சொல்லாமல் செய்தது தர்மம்
சொல்லியும் செய்யாதது வீம்பு
பார்த்து ரசித்தது இயற்கை
பார்க்காமல் ரசித்தது கனவு
கேட்டு ரசித்தது இசை
கேட்டு ரசிக்காதது அழுகை
நடக்கும் என்று நம்புவது நம்பிக்கை
நடக்காது என்று நம்புவது அவநம்பிக்கை
ஓத விரும்புவது வேதத்தை
ஓதி மறப்பது பாடத்தை
விரும்பிக் கொடுப்பது முத்தம்
விரும்பிப் பார்ப்பது முகநூல்
விரும்பிச் சேர்ப்பது நண்பர்கள்
விரும்பாமல் போனது நண்பர்கள்
சேர்க்க நினைப்பது அறிவு
சேர்த்துப் போனது பணம்
சொல்ல விரும்புவது உயர்ந்தவை
சொல்லாமல் விட்டது தாழ்ந்தவை
உயர்ந்த கருத்துக்களை சொல்வார்கள் மற்றும் எழுதுவார்கள் ஆனால் சொன்னபடி எழுதியபடி வாழ்வதில்லை ,காரணம் அவன் மனிதன்.
இப்படி முடித்து விட்டீர்களே... ம்... உண்மை தான் இன்றைக்கு...!
ReplyDeleteதெரியாதவை இல்லை...! இல்லாதவை இல்லை...! ஒரு அலசல் :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html