Sunday, 30 June 2013

எங்கே அவள்? என்று நான் ஏன் கேட்க வேண்டும் !

எங்கே அவள் என்று  நான் ஏன் கேட்க வேண்டும் !
அவள் பள்ளிவாசலுக்கு தொழ போயிருக்க மாட்டாள்
அவள் வீட்டில்தானே தொழுவாள்
அவள் விரும்பினாலும் அவளை பள்ளிவாசலில் தொழ யார் விடுவார் !

பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடுதான் அவர்களுக்குச் சிறந்தது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

ஆண்கள் தொழத் தானேபள்ளிவாசலை  பெரிதாக கட்டினோம்
ஆண்கள் தொழுவார்கள் பெரிய  பள்ளிவாசலில் ஆனால் தொழுபவர்கள்  குறைவு
பள்ளிவாசலில் மற்ற இடங்களில் பெண்கள் திரை போட்டு தொழவும் அனுமதி தரமாட்டார்கள்
பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை நிறைந்து நின்று தொழ பெரிதாக கட்டினார்கள்

அவள் பள்ளிவாசலுக்கும் போக மாட்டாள்
அவள் கடைதெருவுக்கும் போக மாட்டாள்

அவள் போகுமிடம் அவள் அம்மா வீடு அல்லது மகள் வீடு
அவள் அவளது சகோதரி வீட்டுக்கும் போயிருக்கலாம்
அவள் அவளது சகோதரியை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கவும் போயிருக்கலாம்

ஊருக்கு போய் வந்து வீடு பூட்டி இருக்க இத்தனை குழப்பங்களும் வருகிறது.
பாவம் ! போய் விட்டு வரட்டும் நாம்தான் அவளை வீட்டு வேலையில் முடக்கி விட்டோமே !

பெண்சாதி பன்மையாக இருக்க முடியாது

போட்டி போட்டு முன்னேறு
போட்டி போடவேண்டியதில் போட்டி போடு
போட்டிக்காக போட்டி வேண்டாம்
போட்டி போடுவதில் குறிக்கோள் வேண்டும்
போட்டி போடுவது திறமையை வளர்த்துக் கொள்ள
போட்டி போட்டு பரிசுகளை அள்ளிக் கொள்ள
போட்டி போடுவது பெருமையை நாடி அல்ல
போட்டியில் வெற்றி கொண்டால் கர்வம் கொள்ளாதே
போட்டி போடுவது மற்றவரை வீழ்த்த அல்ல
போட்டி போடுவது நாம் வெற்றி அடைய
போட்டியின் வெற்றி நிலையானதல்ல

போட்டியில் தோற்றால் துவண்டு விடாதே
போட்டியில் வேகமும் விவேகமும் வேண்டும்
போட்டியில் வெற்றி கொள்ள வெறி வேண்டாம்
போட்டியில் அச்சம் அடைய  வேண்டாம்
போட்டியின் அனுபவம்  நம் நிலை அறிய வைக்கும்
போட்டியின் தோல்வி ஆளுமைக்கு வழிகாட்டி
போட்டியின் தோல்வி மனோபலத்தின் எடைக் கல்

பேச்சுப் போட்டியின் முடிவு தர்க்கத்தின் வெற்றி அல்ல
பேச்சுப் போட்டியின் முடிவு விவாதத்தின் விளக்கம்
பேச்சுப் போட்டி வெற்றி கொண்டாட அல்ல
பேச்சுப் போட்டியின் வென்றதால் இறுமாப்பு வேண்டாம்
பேச்சுப் போட்டியில் அனைவர் பங்கும் அதில் அடங்கும்
பேச்சுப் போட்டியில் அனைத்துக் கருத்தும் உடன்பாடாகிவிட முடியாது

அறிவுக்கான போட்டி நம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கான போட்டி நம் உடல்நலத்தை வளர்க்கும்
மூளை பயிற்சி அறிவை வளர்க்கும்
உடற்பயிற்சி உடல்நலத்தை வளர்க்கும்
பணத்தை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை வீழ்த்தும் குறிக்கோள் வேண்டாம்
நன்மை சேர்க்கும் போட்டியில் அடுத்தவரை சேர்த்துக் கொள்
இறைவணக்கத்தில் போட்டி இல்லை இறைவணக்கத்தில்  ஈடுபாடு வேண்டும்

Saturday, 29 June 2013

காலமெல்லாம் கவலை !


பணமில்லையே என்ற கவலை வந்தது

பணம் கிடைத்தும் அதை அனுபவிக்க உடல் நலமில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆக வில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆன பின் நாம் நினைத்தபடி மனைவி அமையவில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆகிய பின் குழந்தை பெரும் பாகியமில்லையே என்ற கவலை வந்தது

குழந்தைகள் பெற்றும் நாம் நினைத்தபடி குழந்தைகள் படிக்கவில்லையே என்ற கவலை வந்தது

வளர்த்த செடி சிறப்பாய் வளர பாதுகாப்போடு கவணிப்போம்
மனம் மணமாய் மகிழ்ந்து மனம் வீச இறையருள் இதயத்தில் இருக்க நினைப்பதில்லை
துன்பம் வர துவளுகிறோம் .மகிழ்வு வர துள்ளுகிறோம்
இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலை கொண்டு மனதை சமப்படுத்திக் கொள்வதில்லை

சிறிய கவலை பெரிய கவலை வந்து மறையும் இது நியதி
மறதி என்று ஒன்றில்லையெனில் மனோவியாதி வந்து மடிவோம்

அத்தனைக்கும் மருந்து இறைவனைத் தொழுது தொடர் வேலையில் தொடர்வதே சிறப்பாக்கி வைக்கும்.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.-- குர்ஆன்  94:5

Friday, 28 June 2013

உயர உயரப் போனாலும் உன்னிலை அறிந்துகொள்


உயரத்திற்கு ஏற ஏணி வேண்டும்

உயரத்திலிருந்து இறங்கவும் ஏணி வேண்டும்

உயரம் போனவர் உயரத்திலேயே இருப்பதில்லை

உயர உயரப் போனாலும் கீழே  வந்தாக வேண்டும்

உயர்த்தி விட்டவர் உன்னைத் தாங்கிப் பிடித்தல் வேண்டும்

உயர்த்தி விட்டவர் உன்னை உதறி விட்டால் விழுந்து மடிவாய்

உயர்ந்த உறவை நாடி நிற்க உயர்வைப் பெறுவாய் .

உயர்வாக உனக்கு கொடுக்கப் பட்டது உனக்கு மட்டுமல்ல

உயர்வாக உனக்கு கொடுக்கப் பட்டது

உன்னை உயர்வாக்கியவர்களுக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டதே


- முஹம்மது அலி ஜின்னா.
------------------------------------------------------------------------------------------------

Tuesday, 25 June 2013

எவ்வுலகையும் ஆள்பவன் அருள் கிடைக்க..!


இறைவனின் அருளை வேண்டுதலை   மனிதன் மறக்க
இறைவனின் சோதனைகளில் மனிதன் தடுமாற

நீரால் நிரம்பிய நிலையால் ஒரு பக்கம் கெட
நிலத்தடி நீரே இல்லாத நிலையால் ஒரு பக்கம் வாட
விஞ்ஞானத்தின் வளர்ச்சி திகைத்து நிற்க
அரசின் அலட்சியங்கள் மக்களைப் பாதிக்க
அரசியலின் மாற்றங்கள் உருவாக்கும் நிலையாக 

மெய்ஞானத்தின் தளர்ச்சி வதைத்து நிற்க
ஞானத்தின் திறவுகோளால்  இறைவனை நினைக்க

அன்பு மயமாக யவ்வுலகையும் ஆளும் இறைவனின் அருள் கிட்டும்

Monday, 24 June 2013

ஆகாயத்தில் கோட்டை கட்டினேன்

ஆகாயத்தில் கோட்டை கட்டினேன்
ஆகாயத்தில் போன மேகம் கோட்டையை கலைத்து விட்டது

ஆகாயத்தில் இருந்து நண்பர்களை பார்த்தேன்
ஆகாயத்தில் இருந்து பார்த்த நண்பர்கள் பொம்மைகளாய்த் தெரிந்தனர்
ஆகாயத்தில் இருந்ததால் நண்பர்கள் தெரியாததால் தரைக்கு வந்தேன்
ஆகாயத்தில் இருந்து தரைக்கு வர  நண்பர்கள் தெரிய மனம் விட்டு பேசி மகிழ்ந்தேன்

Saturday, 22 June 2013

மகிழ்வைத் தருவதாக சொல்லி விற்பவர்கள் மயக்கம் தருபவர்கள்.


மகிழ்வைத் தருவதாக சொல்லி விற்பவர்கள்  மயக்கம் தருபவர்கள்
மகிழ்வு கடைத்தெருவில் வாங்கும் பொருளல்ல

பெற்றோர் பாசம் காட்ட மகிழ்வு வருகிறது
பெற்றோர் கண்டிக்க  மகிழ்வு மறைகிறது

வேலை கிடைக்க மகிழ்வு
வேலையின்  கடுமை வர மகிழ்வில் தொய்வு

காதலிக்கும்போது மகிழ்வாய் தோன்றுகிறது
கல்யாணமானபின் மகிழ்வு வரும் போகும்

Tuesday, 18 June 2013

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்

நதியும் மக்களும் உருவாக்கிய பிரிவுகள்


ஒன்றாக வந்த வற்றாத ஜீவ நதி வளமாக ஆற்றின்  வழி நீர் பெருக்கெடுத்தோடி பல வாய்க்கால்களாக பிரிந்து ஆங்காங்கே உள்ள இடங்களை செழிக்கச் செய்து மக்களுக்கு நன்மை பயக்கின்றது.

ஓடிக்கொண்டேயிருக்கும் ஜீவ நதிக்கு ஓயவில்லை களைப்பில்லை ,ஜீவனாம்சமும் தேவையில்லை,இளைப்பாற இடமும் தேவையில்லை   அதுக்கு தேவை மழை .
   
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில்
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை - ஒளவையார்

ஆணாக ,பெண்ணாக தனியே வந்த மனித படைப்பு ஒற்றுமையாக ஒன்றிணைந்து அதன் பலனால் பல் மக்களாக பெருகி தன்னை சீர் படுத்திக் கொள்ள ஒரு மார்கத்தை கண்டு அதன் வழியே நல்வழி பெற்றோர் தனக்குள் பல ஜாதி ,மதமென பல பிரிவுகளாக்கிக் கொண்டு தன்னையும் அழித்து மக்களுக்கு தீமை பயக்கின்றனர்.


ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ.
ஆண்சாதிக்கு தேவை பெண்சாதி

ஆணுக்கு தேவை பெண் வளமாக வாழ

 "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையில் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங் கிலுள்ள படி. " - அவ்வையார்

என் விழி இதழ்களை தொட்டால் !


என் விழி இதழ்களை தொட்டால் ரோஜாவின் இதழ்களைப்போல் மென்மையாக இருப்பதை உணர்கிறேன்

நீ சொல்கிறாய் 'என்னைத் தொட்டாலே ரோஜாவின் இதழ்களை விட மென்மையாக இருப்பதாய்' சொல்கிறாய்

நான் சொல்கிறேன் 'ரோஜா மலரை தொடும்போது ரோஜாச் செடியின் முள் உன்னை கீறிவிடும் அதுபோல் என்னைதொட முயன்றால் உன் உடலில் கீறல் வந்து விடும் என்பதை நினைவுக் கொள்' என்று.

நீ சொல்கிறாய் 'என் வாயின் இதழ்களின் வழியும் நீர் கீறலுக்கு மருந்தாகிவிடும் ஒரு முத்தம் தரும்போது' என்று

நான் சொல்கிறேன் 'நான் உன்னை முத்தம் கொடுத்தால் என் வாயில் உள்ள பற்கள் உன்னை கீறிவிடுமென்று' என்று

நீ சொல்கிறாய் 'நான் கொடுக்கும் முத்தத்தில் மயங்கி விடுவேன் அது கீறலினால் வந்த வலியை மறக்கச் செய்துவிடுமமென்று'

நான் சொல்கிறேன் 'நாம் பேசியே நேரத்தை கடத்தி விட்டோம் .நீ பேசுவதோடு சரி செயலற்றவன் வருகிறேனென்று '

ஒன்றுமே நடக்கவில்லை இந்த வார்த்தை உனக்கு மயக்கத்தை தந்துவிட்டதே! இப்பொழுது உன்னை யார் மருத்தவரிடம் அழைத்துச் செல்வது .நான் இங்கு நிற்பதே ஆபத்தை எனக்கு விளைவிக்கும் நான் வருகிறேன்.

முதலில் என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .

இனியாவது வீண் கற்பனையில் மூழ்காமல் உன்னைப் பாதுகாத்துக் கொள் .

Monday, 17 June 2013

காதல் காந்தமானது


காதல் காந்தமானது
காதல் ஈர்ப்பு சக்தியைப் பெற்றது
காதலில் பாலியல் உணர்வும் மேலோங்கி நிற்கும்
காதலில் அன்பும் உணர்வும் கலந்த கலவையாய் இருக்கும்
காதலால் கடிமனம் கொண்டவரும் மென்மை மனம் பெறுவர்
காதலால் உந்தப்பட்டு கல்யாணமும் செய்துகொண்டு மணம் பெறுவர்

காதல்? காதல்! காதல்.
காதல் கைக் கூட வில்லையின் சாதல்
காதலின் மகிமையை மாற்றும் மனிதன்
காதல் காதல் காதல் இல்லையேல் சாதல்
இதுதான் இன்றைய நிலையாக மாறும் மனிதன்
இந்தக் காதல் பலவீனமான காதல்
காதலித்து வெற்றி பெற பொறுமையும் ,நேசமும் ,அறிவுமே துணை நிற்கும்
காதல் அணைத்தையும் அணைத்துச் சென்று வாகை சூடும்

காதலுக்கு பல் பொருளுண்டு
காதல் வாழ்வின் ஒரு பகுதி
காதல் வாழ்வை நீடிக்கும்
காதல் அன்பின் தூதுவன்
காதல் நேசத்தின் இருப்பிடம்
காதல் பனிக்குடத்தில் பிறந்தது
காதல் இல்லையேல் குடும்பமேது!
காதல் இல்லையேல் நாமேது
அவ்வாவின் மீது ஆதத்திற்கு வந்த காதல் உலகத்தை உருவாக்கியது

தொலைக் காட்சியும் ஃபேஸ்புக்கும்


தமிழ் தொலைக் காட்சி
கடந்த இரண்டு மணி நேர தமிழ் தொலைக் காட்சி நிகழ்சிகள்
தொடர் நாடகங்கள் - சரியான அறுவை
படக்காட்சி - பார்த்து அலுத்துப்போனவைகள்
செய்திகள் - பழையனவும் புதியதும் கலந்தவை மற்றும் கொலை, கொள்ளை ,விபத்துகள்
-- அதிர்ச்சி ,அறிதல் ,வருத்தம் ,அனைத்தும் நிகழ்வுகள் .
தயார் செய்யப்பட்டு எழுதி கொடுக்கப்பட்டவை
விவாதம் ,நேர்காணல் மற்றவை - பல விளக்கங்கள் ஆனால் அனைத்தும் அவர் மனதில் வரும் கருத்தாகாமல் தான் சேர்ந்தவர்களை ஆதரிக்கும் சார்புடையவை ,
-----------------------------

ஃபேஸ்புக் விளையாடும் தளத்தில்

ஃபேஸ்புக் வந்தால் பல்வகை கூட்டு கிடைக்கிறது . அவரவர் (படித்தவர் ,படிக்காதவர் ) கட்டுப்பாடின்றி மனம் திறந்து மடையாக ஓடும் நதியான காட்சி.
வேண்டிய நேரம் குளித்து மூழ்கி முத்தும் ,மீன்களும் ,கூழாங் கற்களும், சிப்பிகளும் மற்றும் மணலும் அள்ளிப் போகலாம் அல்லது பார்த்து மகிழலாம் . எல்லோருக்கும் வாய்ப்பு .அதுவே சிறப்பு

Sunday, 16 June 2013

இருட்டில் இருக்கிறது இதயம்


இருட்டில் இருக்கிறது இதயம்
இதயத்தில் இருக்கிறது மூச்சு
முச்சில் இருக்கிறது உயிர்
உயிரில் இருக்கிறது குடும்பம்
குடும்பத்தில் இருக்கிறது பாசம்
பாசத்தில் இருக்கிறது மகிழ்வு
மகிழ்வில் இருக்கிறது வாழ்க்கை
வாழ்கையில் இருக்கிறது நேசம்
நேசத்தில் இருக்கிறது நன்மை
நன்மையில் இருக்கிறது சுவனம்
சுவனத்தில் இருக்கிறது இறைவனது அன்பளிப்பு

இதயம் இருட்டாகிவிட்டதே
இறக்கம் இதயத்தை விட்டு அகன்று விட்டதே
அறிவிலும் இருட்டு சூழ்ந்து விட்டதே
பார்வை குறைந்து  இருட்டாகத் தெரிகின்றதே

Friday, 14 June 2013

கவிஞன்


கவிஞன் காணாததை கவிதையில் சொல்வான்
கவிஞன் கண்டதையும் கவிதையில் சொல்வான்
கவிஞன் காணாததையும் கண்டதையும்  நயமாக சொல்வான்
கவிஞன் கற்பனை  வெள்ளத்தில் நீந்துவான் 

கவிஞனின் பெயரில் ஒளிவு மறைவு இருக்கும்
கவிஞனின் கவிதை கருத்திலும்  உண்மை மறைந்திருக்கும்
கவிஞனின் கவிதை பொய்யால் புனைக்கப்  பட்டதல்ல
கவிஞனின் கவிதை மெய்யால் மிகைப் படுத்தப்  பட்டிருக்கும்

கவிஞன் வார்த்தையால் விளையாடுவான்
கவிஞன் வாய்மையால்  கலைஞனாவான்
கவிஞன் வாழ்த்துவதில் கவிதையாய் தந்து மகிழ்வான்
கவிஞன் வாழ்தப்படுவதில் கவிஞனின் கவிதைகள் மணம் வீசும்

Thursday, 13 June 2013

மரம்னா சாதாரணமா! மரம் ஒரு வரம்.


அப்பா
ஏன்டா மரம் மாதிரி நிக்கிறே! கேட்கிறதுக்கு பதில் சொல்லு.
மகன்
மரம்னா உங்ககளுக்கு சாதாரணமா போச்சா ! மரமிருந்தாதான் மழை பெய்யும்,நிழல் கொடுக்கும். மரம் நடச் சொல்லி எல்லோரும் சொல்றாங்க .
அப்பா .
தனி மரம் தோப்பாகாது. மக்களோடு பழகனும் ,ஒற்றுமையா இருக்கணும் .
மகன்
நான் தனி மரமா இருக்க விரும்பவில்லை.எனக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு மரத்தையும் சேர்த்துடுங்க .அப்புறம் பாருங்க அது நல்லா வேறுன்றி செழிப்பா வளர்ந்து கிளைகள் அதிகமாகி அதன் விதைகள் வழியே பல மரங்களை உருவாக்கி தோப்பாகும் .
 நீங்கள் சொன்ன இந்த தனி மரம் அடுத்த மரத்தோடு சேர்த்து வைத்த பின் பாருங்கள்   உங்கள் பரம்பரையை வளர்த்து நிற்கும்
அப்பா
நான் ஒரு மரம் உன்னிடம் சொன்னேனே!

Monday, 10 June 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.

 அரபு நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோதச் செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. அரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு புதைத்து விடுவதும் அல்லது கொன்றுவிடும் பழக்கம் இருந்தபோது இறைவனால் இறக்கப்பட்ட வசனம் இவைகள்.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.- Qur'an 17:31 திருக்குர்ஆன்-17:31

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. - திருக்குர்ஆன் 6:140

யார் அந்த வீரன் !

உன் தந்தை சொல் கேட்டு மதி கெட்டேன்
உன் தந்தைக்கு உணர்ச்சி கொப்பளிக்கும்
உன் தந்தைக்கு உணர்ச்சியை அடக்கும் மனமில்லை
உன் தந்தைக்கு செயல் வேண்டும்
உன் தந்தைக்கு செயலின் விளைவின் அருமை விளங்கவில்லை
உன் தந்தை சொல் கேட்டு அத்தனை தடை போட்டேன் நீ வராமலிருக்க
நம் இறைவன் அத்தனை தடையும் உனக்கு எளிதாக்கி உடைக்க வழி செய்தான்
உன் ஆற்றலால் உட்புகுந்தாய்
உட் புகுந்த உனை உயிராக உருவாக்கினேன்
உன் நேரம் வந்து உலகில் உயர்வாக  உயிர் பெற்றாய்
உனைக் கண்டு உளம் மகிழ்ந்து உயர்வாய் உனைப் போற்றுகிறார்
வேண்டாம் என்றவனை விரும்பி விரும்பி கொஞ்சுகின்றார் உன் தந்தை
வீரனாய் உட்புகுந்து வீரனாய் வெளிவந்து விரும்பியனாய் வந்தவன் நீ
எல்லா வகையிலும் என் மனதில் ஏற்றம் பெற்றாய்!
நீ தானடா உண்மையான வீரன் என் அருட் செல்வமே !

 -------------------------------------------------------------------------------------------
தமிழில் தர்ஜமதுல் குர்ஆனை முதன் முதலில் மொழி பெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ,சிராஜுல் மில்லத் ஆ.கா.அ . அப்துஸ் சமது அவர்களின் தந்தை ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி. அவர்களிடம் ஒருவர் சென்று கர்பத்தடையைப் பற்றி தங்களது கருத்து என்ன என்று கேட்டாராம். அதற்கு மதிப்புக்குரிய பாகவி அவர்கள் "இந்த கேள்வியை உன் தகப்பனார் கேட்டிருக்க வேணும் என்று சொன்னார்களாம்" . இதன் பொருள் உன் தந்தை கர்பத்தடையை செய்திருந்தால் இந்த கேள்வி கேட்க இந்த உலகத்திற்கே நீ வந்திருக்க மாட்டாய் என்பதுதான் . யோசனை செய்யுங்கள். நம் தகப்பனாரும் இதை செய்திருந்தால் நாமும் வந்திருக்க மாட்டோம்

Friday, 7 June 2013

யார் சொன்னார் ? ஏன் சொன்னார் !


சொன்னவர் செயல் படுத்தினாரா!
சொல்வது எளிது .செயல்படுத்துவது கடினம் .
யார் சொன்னார் ? ஏன் சொன்னார் !
சொன்னவர் செயல் படுத்தினாரா! என்று ஆய்வு செய்வதை தவிர்த்து சொல்வது உயர்வாக இருப்பின் அதனை மனதில் இருத்திக் கொள்வது சிறப்பு தரலாம். சொன்னவர் சொன்னபடி செய்யவில்லை என்பதை நினைத்து நாம் ஒதுக்க ஆரம்பித்தால் ஒன்றுமே நமக்கு கிடைத்திருக்காது. உயர்ந்த கருத்துகளை சொன்னவர் சொல்லியபடி செய்திருந்தால் அவர் உயர்ந்த நிலைக்கு உரியவராகி விட்டார்.

இறைவன் சிலருக்கு அறிவைத் தந்திருக்கலாம் .அவர் அதனை மற்றவருக்கு பகிர்ந்திருப்பார்.அதனை நாம் பெற்றுக் கொள்வோம்.பகிர்ந்தவர் அதன்படி நடந்தாரா என்ற சிந்தனை பகிர்ந்த உயர்ந்த பொருளை இழக்க நேரிடும் . வீரத்தைப் பாடியவர் கோழையாகவும் இருக்கலாம் . காதலைப் பற்றி கவிதைப் பாடியவர் காதலித்துத்தான் பாட வேண்டும் என்று நினைப்பது முறையாகிவிடாது.
உற்பத்தி செய்பவர் ஒருவர் ,விற்பவர் ஒருவர் ,வாங்குபவர் ஒருவர், பயனடைபவர் ஒருவர் .இது யதார்த்தம். கருவைக் கண்டு பெறுவதைக் பெற்று பயனடைதலும் சிறப்புதான்.

கவிதை தமிழ் வளர்க்கும் மருந்தானது


பாட நூல்களாக கவிதைகள் படிக்கும்போது வெறுப்பைத் தந்தது
தேர்வுக்காக கவிதைகள் படிக்கும்போது மறந்து போனது
படக் காட்சிகளில் கவிதைபோல் வந்தது வாய் அசைத்தது
நிகழ்வுகளை ,உணர்வுகளை மனதில் உறைய வைக்க
பாரதியும் ,பாரதிதாசனும் கவிதைகளை எளிமைப் படுத்தினர்
புதிய கவிதைகள் ஹைக்கூவாக வந்து மனதில் கொக்குப் போட்டன
கண்ணதாசன் ,கவிக்கோ, கவியரசு, மேத்தா கவிதைகள் கவின்மிகு படைப்புகளாயின
போதனையாக ,காப்பியங்களாக வந்த சங்க கால கவிதைகள் உருமாறி வந்தன
உருமாறி வரும் கவிதைகள் நகைச்சுவை, நையாண்டி, கலாய்த்தல் வகையாயின
கவிதைக்கு 'மவுசு ' கூடத் தொடங்க படக் படக்காட்சியிலும் பாடகள் வராதா யென கவிஞர்கள் விரும்ப அனைவருக்கும் கவிதை ஆசை வர கவிதைக்கே மவுசு கூடியது
பாட நூல்களாக கவிதைகள் படிக்கும்போதும் தேர்வுக்காக கவிதைகள் படிக்கும்போதும்
கவிதையாக படிப்பதிலும் ஆசை இயல்பாகவே வந்தது.
புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் தமிழுக்கு சேவை செய்து புத்துயிர் ஊட்டுகின்றனர்
தமிழ்க் கவிதை வளர தமிழும் வளரும் தமிழரும் வளர்வர்

பணம்! பணம்! பணம்?


பணம் வாழ்வில் வசதியை உருவாக்க உதவும்
பணம் மட்டும் வாழ்வில் மகிழ்வைத் தராது
Money can't buy happiness, but it can make you awfully comfortable

விருப்பப்பட்டு வாகனம் வாங்கி
வாங்கிய வாகனத்தை விரைவாக செலுத்தி
விரைவாக செலுத்தியமையால் தடுக்கி வீழ்ந்து
வீழ்ந்த இடத்தில சிதறிய சில்லறைகளை பொருக்கினேன்
பணம் பொருக்கும் மனதை வளர்த்து பொறுக்கியாக்கியது

Wednesday, 5 June 2013

ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போடணும் !

அண்ணே! நீங்கள் தானே ஜப்பார்

நான் வெறும் ஜப்பார் அல்ல. அரசகுளம் ஜப்பார்

சரிண்ணே . உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கணும்

முதல்ல சலாம் சொல்

சலாம்ணே

அதை முசுசா சொல்ல கத்துக்க

அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே

ஏதோ சொல்கிறார் ...

பதில் சொல்லுங்க அண்ணே

என்னய்யா பதில் சொல்ல

சலாத்துக்கு பதில்

அதை ஒலி பெருக்கி வைத்தா சொல்ல முடியும் . எனக்கு வேலை இருக்கு வந்த வேலையை சொல்
அப்படி என்ன வேலை!

ஃபேஸ் புக்கில் ஸ்டேடஸ் போடணும்

ஆமாங்க நீங்க பெரிய கேள்வியெல்லாம் கேட்பதாய் சொல்றாங்க !

(மகிழ்ச்சி பொங்க) டீ குடிக்கிறியா !

Sunday, 2 June 2013

"கலைஞர் ஒரு கடந்தகால சகாப்தம்"



"கலைஞர் ஒரு கடந்தகால சகாப்தம் ..

கலைஞர் ஒரு நிகழ்கால நிஜம்

கலைஞர் ஒரு வருங்கால சரித்திரம் !"
-
Abu Haashima Vaver



                                               Mohamed Ali,Selvem,Durimurugan


கலைஞரின் மருமகன் செல்வத்திடம் எனக்கு நெருங்கிய பழக்கம்
(கல்லூரி யில் உடன் படித்தவர் )இருந்ததால் முரசொலி அலுவலகம் செல்வதுண்டு . கலைஞரின் நேரம் போதாமையால் முரசொலி பத்திரிக்கையில் வர தினமும் தம்பிக்கு எழுதும் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது .அதே நிலை இப்பொழுதும்.இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை
- முகம்மது அலிMohamed Ali

Saturday, 1 June 2013

வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.

'எல்லோரும் கார் வைத்திருக்கிறார்களே நாமும் ஒரு புதிய கார் வைத்திருந்தால் வசதியாக இருக்கும் அத்துடன் சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்கும்'
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
 'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக  வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.

 'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.

'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'

  கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது .  (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்

கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
 ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது  போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.